சிறந்த ஃபேப் 4 பட்டியலில் இருந்து.. விராட் கோலியை குறிப்பிடாமல் விட்ட பாண்டிங்.. கருத்தால் ரசிகர்கள் ஏமாற்றம்

Ricky Ponting
- Advertisement -

இலங்கைக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஜனவரி 29ஆம் தேதி துவங்கிய அந்தத் தொடரின் முதல் போட்டியில் முதல் நாளிலேயே ஆஸ்திரேலியா 10000 ரன்கள் கடந்தார். அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் விராட் கோலி எப்போது இந்த மைல்கல்லை தாண்டுவார் என்ற ஏமாற்றத்தை சமூகவலைதளங்களில் வெளிப்படுத்தினார்கள்.

ஏனெனில் 2020ஆம் ஆண்டில் ஃபேப் 4 பேட்ஸ்மேன்களில் ஸ்டீவ் ஸ்மித் (26), ரூட் (21), கேன் வில்லியம்சன் (17) ஆகியோரை விட விராட் கோலி தான் அதிக ரன்கள் மற்றும் சதங்கள் (27) அடித்து முன்னிலையில் இருந்தார். ஆனால் அதன் பின் கடந்த 5 வருடங்களில் வெறும் 3 சதங்கள் மட்டுமே அடித்த விராட் கோலி சுமாராக செயல்பட்டு வருகிறார். மறுபுறம் அவரை முந்திக் கொண்ட ஜோ ரூட் 12000 ரன்களை தாண்டி 36 சதங்கள் அடித்து மிரட்டி வருகிறார்.

- Advertisement -

எல்லாம் நேரம்:

அவருக்கு அடுத்தபடியாக ஸ்மித் 10000 ரன்கள் கடந்து 35 சதங்கள் அடித்து அசத்தியுள்ளார். ரன்கள் பட்டியலில் கிட்டத்தட்ட விராட் கோலிக்கு சமமாக இருக்கும் வில்லியம்சன் 33 சதங்கள் அடித்துள்ளார். இந்நிலையில் அப்படி சமீபத்திய வருடங்களில் சுமாராக செயல்படுவதால் ஃபேப் 4 பட்டியலில் விராட் கோலியை சிறந்த வீரர் என்று ரிக்கி பாண்டிங் வாதிடாமல் கழற்றி விட்டுள்ளார்.

இது பற்றி சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிக்கையில் அவர் தெரிவித்தது பின்வருமாறு. “ஸ்மித் இந்தத் தலைமுறையின் சிறந்த வீரர் அல்லவா? அவருக்கு எதிராக வாதிடுவது கடினம். ஜோ ரூட் மற்றொரு சிறந்த வீரர். வில்லியம்சன் புள்ளி விவரங்களும் அபாரமாக இருக்கிறது. ரூட் கடந்த சில வருடங்களாக அற்புதமாக விளையாடி அங்கே தன்னுடைய பெயரைக் கொண்டு வந்துள்ளார்”

- Advertisement -

கழற்றி விட்ட பாண்டிங்:

“5 – 6 வருடங்களுக்கு முன் இந்த நால்வரும் வளர்ந்த போது விராட் கோலி பெரிய வீரராக இருந்தார். ஜோ ரூட் அந்தப் பட்டியலின் அடியில் இருந்தார். ஏனெனில் அவர் மற்ற வீரர்களை காட்டிலும் குறைந்த சதங்கள் அடித்திருந்தார். ஆனால் தற்போது அவர் கடந்த 4 வருடங்களில் 19 சதங்கள் அடித்துள்ளார். எனவே இங்கிலாந்தினரை கேட்டால் ஜோ ரூட் சிறந்தவர் என்று சொல்வார்கள்”

இதையும் படிங்க: 2012 ரஞ்சியில் பார்த்த வீக்னெஸ் இன்னும் மாறாதது நம்ப முடியல.. கோலி இதை செய்ய வேண்டிக்கிறேன்.. ஃகைப் பேட்டி

“ஆஸ்திரேலியரிடம் கேட்டால் ஸ்மித் சிறந்தவர் என்று சொல்வார்கள். நியூசிலாந்து ரசிகர்களிடம் கேட்டால் வில்லியம்சனை கூறுவார்கள். எனவே அவர்களில் சிறந்தவர் யார் என்று தற்போது வாதிடுவது கடினமான ஒன்றாகும்” என்று கூறினார். இந்தக் கருத்தைப் பார்க்கும் இந்திய ரசிகர்கள் இதெல்லாம் விராட் கோலி மற்றும் எங்களுடைய நேரம் என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisement