நானா இருந்தா ஆகாஷ் முகத்தில் குத்து விட்ருப்பேன்.. அவங்க நண்பர்களாக இருக்கவும் வாய்ப்பிருக்கு.. ரிக்கி பாண்டிங்

Ricky Ponting 25
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் ஜூலை 31ஆம் தேதி துவங்கியது. அதில் முதலில் விளையாடிய இந்தியா 224 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து 247 ரன்கள் குவித்து இந்தியாவை விட 23 ரன்கள் முன்னிலை பெற்றது.

அதைத் தொடர்ந்து விளையாடும் இந்திய அணி 2வது நாள் முடிவில் 75/2 ரன்கள் குவித்து 300+ ரன்களை இலக்காக நிர்ணயிக்கும் நோக்கத்துடன் விளையாடி வருகிறது. முன்னதாக அந்தப் போட்டியின் இரண்டாவது நாளில் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் அதிரடியாக விளையாடினார். அப்போது ஆகாஷ் தீப் வீசிய ஒரு பந்துக்கு எதிராக அவர் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் வாயிலாக சிக்சரை பறக்க விட்டு அசத்தினார்.

- Advertisement -

குத்து விட்ருப்பேன்:

ஆனால் அப்போது “என்னை இங்கே உங்களால் அவுட்டாக்க முடியாது” என்று டக்கெட் விட்ட சவாலை சிரித்த முகத்துடன் ஆகாஷ் தீப் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து கட்டுகோப்புடன் வீசிய அவருக்கு எதிராக மீண்டும் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயற்சித்த டக்கெட் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதனால் ஏமாற்றுத்துடன் நடையைக் கட்டி அவருடைய தோளில் கை போட்ட ஆகாஷ் தீப் சிரித்த முகத்துடன் சில வார்த்தைகளை சொல்லி தக்க பதிலடி கொடுத்து அனுப்பி வைத்தார்.

அதற்கு “இதுவே நானாக இருந்திருந்தால் ஆகாஷ் முகத்தில் முழங்கையால் குத்து விட்டிருப்பேன்” என்று இங்கிலாந்து துணைப் பயிற்சியாளர் மார்க்கஸ் ட்ரெஸ்கோதிக் பதிலடி கொடுத்துள்ளார். இந்நிலையில் உங்களுடைய காலத்தில் ஆகாஷ் தீப் போல ஏதேனும் பவுலர் இப்படி செய்திருந்தால் அவருடைய முகத்தில் குத்து விட்டிருப்பீர்களா? என்று ரிக்கி பாண்டிங்கிடம் முன்னாள் இங்கிலாந்து வீரர் இயன் வார்ட் கேட்டார்.

- Advertisement -

பாண்டிங் கருத்து:

அதற்கு ஆம் என்று பதிலளித்த ரிக்கி பாண்டிங் இது பற்றி சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி வர்ணனையில் பேசியது பின்வருமாறு. “ஆம் அப்படி செய்திருப்பேன். அதே சமயம் அந்த நிகழ்வை பார்க்கும் போது அவர்கள் இருவரும் ஏற்கனவே எங்கேயோ ஒன்றாக விளையாடியது போல் தெரிந்தது. ஏனெனில் எதிரணி பேட்ஸ்மேன், பவுலர் இப்படி நடந்து கொள்வதை நீங்கள் தினந்தோறும் பார்க்க முடியாது”

இதையும் படிங்க: ஜஸ்ட் மிஸ்.. 10 ரன்னில் சுனில் கவாஸ்கரின் சாதனையை தவறவிட்ட கே.எல் ராகுல் – விவரம் இதோ

“ஒருவேளை அவர்கள் உள்ளூரில் அல்லது ஏதேனும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியிருக்கக் கூடும். அதனால் அவர்கள் தங்களை நன்றாக அறிந்த தோழர்களாக இருக்கக்கூடும். பென் டக்கெட் கிரிக்கெட்டை விளையாடும் விதத்தை நான் விரும்புகிறேன். அந்த சமயத்தில் ஆகாஷ் தீப்பிடம் எந்த ரியாக்சன் கொடுக்காமல் சென்றதற்காக அவரை இன்னும் அதிகமாக நான் விரும்புகிறேன்” என்று கூறினார்.

Advertisement