ஃபார்மை பாக்காதீங்க.. 3வது டெஸ்டில் கம்பேக் கொடுக்க நானா இருந்தா இதை செய்வேன்.. ரோஹித்துக்கு பாண்டிங் அட்வைஸ்

Ricky Ponting 2
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. அதில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளதால் தொடர் சமனில் இருக்கிறது. இதையடுத்து அந்தத் தொடரின் மூன்றாவது போட்டி டிசம்பர் 14ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் துவங்க உள்ளது.

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற அப்போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டிய நிலையில் இருக்கிறது. அந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா சுமாரான ஃபார்மில் இருப்பது கவலையளிக்கும் விஷயமாக இருக்கிறது. இந்நிலையில் ரோகித் சர்மா இடத்தில் தாம் இருந்தால் 3வது போட்டியில் துவக்க வீரராக களமிறங்குவேன் என்று ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

பாண்டிங் அட்வைஸ்:

இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மா இந்திய அணிக்கு மீண்டும் திரும்பிய போது ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடியிருக்க வேண்டும் என்று நான் கருதினேன். முதல் போட்டியில் ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் ஆகியோர் நன்றாக விளையாடி 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால் ரோஹித் உங்களுடைய கேப்டன்”

“ஆனால் அவர் உங்களுடைய ஒரு அனுபவமிக்க வீரர். எனவே அவரை நீங்கள் அவருடைய பொதுவான இடத்தில் விளையாட அனுப்ப வேண்டும். இதை இந்திய அணியும் தற்போது அதையே சிந்திப்பார்கள். எனவே பிரிஸ்பேனில் மீண்டும் ரோஹித் சர்மாவை இந்தியா துவக்க வீரராக கொண்டு வரலாம். அது உங்களுக்கு நீங்களே தெரிந்து கொள்ள வேண்டும். யாரும் சொல்லக்கூடாது”

- Advertisement -

ஓப்பனிங்கில் ரோஹித்:

“நீங்கள் நன்றாக பேட்டிங் செய்கிறீர்கள் அல்லது இல்லை என்பதை தாண்டி அது உங்களுக்கு உள்ளிருந்தே தெரியும். முதல் போட்டிக்கு முன்பாக ரோஹித் அதிகமான இடைவெளி எடுத்தார். அதனால் ஆஸ்திரேலியாவில் வந்து இங்கே விளையாடுவது எளிதல்ல. பெரும்பாலான வீரர்கள் இங்கே ரன்கள் குவிக்க தடுமாறுவார்கள். அவருடைய ஃபார்ம் கவலையை கொடுக்கிறதா என்பது தெரியாது”

இதையும் படிங்க: இதுவரைக்கும் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசல பேசவும் மாட்டாரு.. தல தோனி பற்றி லக்னோ ஓனர் பேட்டி

“நீங்கள் ரன்கள் எடுப்பதில் அக்கறையுடன் இருந்தால் நான் இந்திய அணியில் அவராக இருந்தால் முடிந்தளவுக்கு வசதியாக விளையாடும் ஒரு வழியை கண்டறிவேன். ரோஹித் நீண்ட காலமாக துவக்க வீரராக விளையாடியுள்ளார். அதனால் அவரை துவக்க வீரராக விளையாட வைத்து ராகுலை மிடில் ஆடரில் விளையாட வைக்க முயற்சிக்க வேண்டும். இதைத்தான் நான் செய்வேன். ஏனெனில் ரோஹித்தும் துவக்க வீரராக விளையாடுவதையே விரும்புவார்” என்று கூறினார்.

Advertisement