டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் உயிரோடு இருக்க இந்த ஒரு அணிதான் காரணம் – ரிச்சர்ட் ஹாட்லீ கருத்து

Hadlee
- Advertisement -

கிரிக்கெட் விளையாட்டில் டி20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், கிரிக்கெட் ரிசிகர்களிடையே டெஸ்ட் கிரிக்கெட்டின் மீதான ஆர்வமும், எதிர்பார்ப்பும் சிறிது சிறிதாக குறைந்துகொண்டே வந்தது. எனவே டெஸ்ட் கிரிக்கெட்டின் தரத்தையும், ரசிகர்களுக்கு அதன் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தும் நோக்கத்தில், முதலில் பகலிரவு டெஸ்ட் போட்டிகளை அறிமுகப்படுத்தியது ஐசிசி. அதன் முயற்சியின் இரண்டாம் கட்டமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது. ஐசிசி எதிர்பார்த்தது போலவே இந்த தொடருக்கு கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Siraj

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பயின்ஷிப் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள், வருகிற ஜூன் மாதம் 18ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்டன் மைதானத்தில் பலப் பரீட்சை நடத்தவிருக்கின்றன. இந்த இறுதிப்போட்டி நடைபெறுவதற்கு இன்னும் சிறிது நாட்களே எஞ்சியுள்ள இந்த சமயத்தில், இந்த போட்டி குறித்த கருத்தையும் மேலும் போட்டியில் பங்குபெற இருக்கும் அணிகளான இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரண்டு அணிகளுக்கும் பல்வேறு முன்னாள் வீரர்கள் தங்களால் இயன்ற ஆலோசனைகளையும், கருத்துகளையும் மாறிமாறி வழங்கி வருகின்றனர்.

இதன் வரிசையில் தற்போது நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான ரிச்சர்ட் ஹாட்லீயும் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அவரளித்த பேட்டியில், கிரிக்கெட் விளையாட்டில் இந்திய அணியின் பங்கானது அளப்பறியது என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்திய கிரிக்கெட் அணியால் தான் டெஸ்ட் போட்டிகள் இன்னமும் உயிர்ப்போடு இருக்கிறது. அந்த அணியால் கிரிக்கெட்டுக்கு நிறைய வருவாய் கிடைக்கிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், இந்திய அணியால் தான் கிரிக்கெட் விளையாட்டின் தன்மை இன்னமும் மாறாமல் இருக்கிறது என்று அவர் கூறினார்.

INDvsNZ

மேலும் பேசிய அவர், கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணி டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறது. இதற்காக பல திறமையான கிரிக்கெட் வீரர்களை அந்த அணி உருவாக்கியிருந்தாலும், மற்ற இரண்டு வகையான போட்டிகளை விட, டெஸ்ட் போட்டிகளில் அந்த அணி மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளது என்று அவர் கூறினார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி குறித்து பேசிய அவர்,

IND-1

இங்கிலாந்து நாட்டின் சூழ்நிலையை எந்த அணி மிக சீக்கிரமாக உள்வாங்கிக் கொள்கிறதோ, அந்த அணிக்கு தான் இந்த இறுதிப் போட்டியில் வெற்றிபெற வாய்ப்பு அதிகமாக இருக்கும். இரு அணிகளிலும் பந்தை ஸ்விங் செய்யக்கூடிய பௌலர்கள் இருக்கிறார்கள். எனவே இது ஒரு கடினமான போட்டியாக தான் இருக்கும் என்று அவர் கூறினார். மேலும் இறுதிப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற தன்னுடைய கருத்தை அவர் கூற மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement