தற்போதைய நவீன கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் இவர்தான் – ரிச்சர்ட் ஹாட்லீ கணிப்பு

Hadlee
- Advertisement -

கிரிக்கெட் விளையாட்டு என்றாலே, அதில் ஆல்ரவுண்டர் பணி என்பது தான் மிக கடினமான பணியாக இருக்கும். அதே சமயம் அது தான் இந்த விளையாட்டின் மிகவும் சிறப்பு வாய்ந்த பணியாகவும் கருதப்படுகிறது. ஒரு சிறந்த ஆல்ரவுண்டரால் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டில் ஏதாவது ஒன்றில் சிறப்பாக செயல்பட்டு ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட முடியும். முன்னாள் கிரிக்கெட் வீரர்களில் சிறந்த ஆல்ரவுண்டர்கள் என்றால் கார்ஃபீல்ட் சோபர்ஸ், இயான் போத்தம், கபில் தேவ், ரிச்சார்ட் ஹாட்லீ, ஜாக்யூஸ் கலீஸ், குளூஸ்னர் ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்கள் அனைவரும் பேட்டிங்கில் மட்டுமல்லாமல் தங்களது பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு அவர்களின் அணிக்கு பல வெற்றிகளை குவித்து தந்தவர்கள். இதில் இடம்பிடித்திருக்கும் நியூசிலாந்து நாட்டின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஜாம்பவானான ரிச்சர்ட் ஹாட்லீ, தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் யார் சிறந்த ஆல்ரவுண்டர் என்று தனது கருத்தை கூறியிருக்கிறார்.

Hadlee

- Advertisement -

ஆல்ரவுண்டர்களுக்கு இடையிலான போட்டிகள் என்பது 1970 மற்றும் 1980களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. நாங்கள் எல்லோரும் தங்களில் யார் பெரியவன் என்பதைக்காட்ட போட்டிபோட்டுக்கொண்டு விளையாடுவோம். அணியில் எங்களின் பங்களிப்பு எப்போதும் சரிசமமாக இருக்கும். 1990 மற்றும் 2000களின் சிறந்த ஆல்ரவுண்டர் என்றால் அது தென் ஆப்ரிக்காவின் ஜாக்யூஸ் கலீஸ்தான். அதுவே தற்போதைய கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டர் யார் என்று என்னைக் கேட்டால், நான் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸைத்தான் கூறுவேன் என்று அவர் கூறினார்.

பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணிக்காக பல போட்டிகளில் தனித்து நின்று வெற்றியைத் தேடி தந்திருக்கிறார் என்றாலும், 2019ஆம் ஆண்டு உலக கோப்பையில் மற்ற அனைவரும் சொதப்ப தனி ஒருவனாக நின்று இங்கிலாந்து அணி முதல் முறகயாக ஒரு நாள் உலக கோப்பையை கைப்பற்ற உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் பேட்டிங் பௌலிங் என இரண்டிலுமே கலக்கிய அவர், அதன்பிறகு இங்கிலாந்து கிரக்கெட் ரசிகர்களின் நம்பிக்கை நாயகனாகவே மாறிபோனார்.

Stokes

அவருடைய திறமையை கௌரவிக்கும் விதமாக அந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை அவருக்கு வழங்கியது ஐசிசி. பென் ஸ்டோக்கஸைத் தவிர்த்து மற்ற ஆல்ரவுண்டர்களைப் பற்றியும் பேசிய ரிச்சர்ட் ஹாட்லீ, ரவீந்திர ஜடேஜா, ஷாகிப் அல் ஹசன், மொயீன் அலி, ஜேசன் ஹோல்டர் ஆகிய வீரர்களும் சிறப்பான முறையில் தங்களது ஆல்ரவுண்டர் திறமையை வெளிப்படுத்துகிறார்கள்.

Stokes

ஆனால் பென் ஸ்டோக்ஸ் மிக அற்புதமாக பேட்டிங் விளையாடுவதோடு மட்டுமல்லாமல் ஒரு பார்ட் டைம் பௌலராகவும் செயல்பட்டு இங்கிலாந்து அணிக்கு தனி ஒருவராக வெற்றிகளை குவித்து தந்துள்ளார் என்று அவர் கூறியிருக்கிறார்.

Advertisement