ஓய்வினை அறிவித்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சு “புயல்”.! அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு.!

jonson

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஜான்சன் அணைத்து கிரிக்கெட்டில் இருந்தும் தன் ஓய்வினை அறிவித்துள்ளார். ஜான்சன் பிரெட் லீ, மெக்ராத் போன்றவர்களுக்கு அடுத்து அந்த அணியின் கண்டுபிடிப்பு எனவே கூறலாம். அந்த அளவிற்கு அவரது பந்துவீச்சில் தாக்கம் இருக்கும். ஆஸ்திரேலிய அணியின் அனைத்து விதமான போட்டிகளில் இருந்து 2015 ஆம் ஆண்டு இவர் ஓய்வினை அறிவித்தார்.

john

அதற்கடுத்து, IPL, பிக்பேஷ் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் நடந்த டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்த இவர் தற்போது, எல்லா வகையான அணைத்து கிரிக்கெட்டிலும் இருந்து தான் ஓய்வு பெறுவதை அறிவித்துள்ளார். 39 வயதாகும் இவர் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு மைதானங்களில் தன் வேகத்தினால் அனைவரையும் நிலைகுலைய வைத்தவர்.

மேலும், நான் அடுத்த வருடம் வரை கிரிக்கெட் விளையாடுவேன் என்று நினைத்தேன். ஆனால், என் உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை. எனவே, இந்த ஓய்வு முடிவினை அறிவிக்கிறேன் மேலும் உலகின் அணைத்து மூலையில் இருக்கும் என் ரசிகர்களுக்கும் நன்றி என்று தெரிவித்தார். இப்பொது எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது என்று நெகிழ்ச்சியுடன் தனது ஓய்வு அறிவிப்பினை தெரிவித்தார்.

john 2

மேலும், பயிற்சியாளர் ஆகும் எண்ணம் தனக்கு இல்லை ஏனென்றால், தனக்கு அந்த அளவுக்கு எதுவும் தெரியாது, உலகின் பல நாடுகளை சேர்ந்த இளம் வீரர்களுடன் விளையாடியது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளதாகவும் தெரிவித்தார். இவர் இந்த 2018 ஆம் ஆண்டு IPL போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியது குறிப்பிடதக்கது.