காயமடைந்த சுப்மன் கில்லுக்கு பதிலாக இங்கிலாந்து தொடரில் விளையாடப்போவது இவர்தான் – அது யார் தெரியுமா ?

Gill
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது காரணமாக அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதில் முக்கிய மாற்றமாக இளம் துவக்க வீரரான கில் அணியில் இருந்து நீக்கப்பட உள்ளார் என்ற செய்தி கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது. கால் பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் அவர் இங்கிலாந்து தொடரில் விளையாட வாய்ப்பே இல்லை என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

அதன்படி அவரது காயத்திற்கான முதல் கட்ட சிகிச்சை இங்கிலாந்தில் நடைபெறும் என்றும் அதன்பிறகு அவர் இந்தியா திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் கில் அணியில் இருந்து வெளியேறும் பட்சத்தில் இந்திய அணியில் ரோகித் சர்மாவுடன் இறங்கப் போகும் துவக்க வீரர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

gill 1

இந்திய அணியில் அவருக்கு மாற்று வீரராக அணியில் மாயங்க் அகர்வால் மற்றும் ராகுல் ஆகியோர் இருக்கின்றனர். ராகுல் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி விளையாடி இருந்தாலும் நடுவில் பார்ம் அவுட் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

Agarwal 1

ஆனால் மற்றொரு தொடக்க வீரரான மாயங்க் அகர்வால் தான் அறிமுகமானதிலிருந்து தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை அளித்துள்ளார். இருப்பினும் அவருக்கு அதிர்ஷ்டமின்றி வாய்ப்பு பறிபோனது இதன் காரணமாக ராகுலுக்கு முன்பாக அகர்வாலுக்கு வாய்ப்பு அதிகம் கிடைக்கும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement