Worldcup : ஜாதவ் அணியில் இருந்து நீக்கப்பட்டால் இவருக்கே வாய்ப்பு – பிரபலங்கள் கருத்து

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரு

Kedar-Jadhav
- Advertisement -

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

indiateam

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று முடிந்தது. இன்னும் சில நாட்களில் இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் கேதர் ஜாதவ் இடம் பெற்றுள்ளார். ஆனால் அவர் ஐபிஎல் போட்டிகளில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக தற்போது சிகிச்சை எடுத்து வருகிறார். அவருடைய தோள்பட்டையில் பீல்டிங் செய்யும் போது காயம் ஏற்பட்டது. அதனால் அவர் ஐபிஎல் தொடரின் கடைசி சில போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாட வில்லை மேலும் அவருக்கு ஓய்வு வேண்டும் என்று அணி நிர்வாகம் அறிவித்ததால் அவர் தொடரில் இருந்து விலகி சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

Kedar-Jadhav

இந்நிலையில் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி வரும் 22ஆம் தேதி இங்கிலாந்து புறப்பட்டு செல்ல உள்ளது. அதற்கு முன்னர் ஜாதவ் முழு உடல் தகுதி பெற்றால் மட்டுமே இங்கிருந்து செல்ல முடியும் அப்படி இல்லை என்றால் அவருக்கு பதிலாக இளம் அதிரடி வீரர் ரிஷப் பண்ட் இடம்பெறவே அதிக வாய்ப்பு உள்ளது என்று பல முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர். இதனால் ரிஷப் பண்ட் அணியில் இடம்பெற ஒரு வாய்ப்பு இருப்பது மட்டும் நிச்சயம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement