இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், டி20, ஒருநாள் என அனைத்து தொடர்களிலும் விளையாட இருக்கிறார்கள். இந்த தொடரின் ஒருநாள் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த தொடர் முடிந்து டி20 போட்டிகள் நடைபெறும் அதன் பின்னர் டிசம்பர் 17-ஆம் தேதி டெஸ்ட் தொடர் துவங்க இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி முடிந்தவுடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்தியாவிற்கு திரும்பிவிடுவார். அவருக்கு முதல் குழந்தை பிறக்கப்போகிறது. அந்த நேரத்தில் தனது குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவிற்கு திரும்பிவிடுவார்.
அதனால் டெஸ்ட் தொடரின் எஞ்சிய மூன்று டெஸ்ட் போட்டியில் இவரால் ஆட முடியாது. அப்படியே அவரால் ஆட முடியாத நேரத்தில் அவருக்கான இடத்தை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த இந்திய வீரர்கள் பற்றி பார்ப்போம்.
சுப்மன் கில் :
தற்போது இவருக்கு 21 வயதாகிறது. பெரிதாக அனுபவம் இல்லை என்றாலும் இந்திய அணியின் அடுத்த சிறந்த பேட்ஸ்மேன் என்பதால் இவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைத்திருக்கிறது. முதல் தரப் கிரிக்கெட்டில் 21 போட்டிகளில் ஆடி 2133 ரன்கள் குவித்திருக்கிறார். இதன் சராசரி 73.55 ஆகும் அதிகபட்சமாக 268 ரன்கள் எடுத்து இருக்கிறார்.
கே எல் ராகுல் :
இந்திய அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும். இவர் 2000 ரன்கள் எடுத்து இருக்கிறார். இதில் 5 சதங்களும் 11 அரை சதங்களும் அடங்கும். இவரது முதல் சதம் ஆஸ்திரேலியாவில் தான் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ரோகித் சர்மா :
டெஸ்ட் அணியில் தற்போது தான் இவருக்கு இடம் கிடைத்திருக்கிறது. துவக்க வீரராக இல்லை என்றாலும் டெஸ்ட் போட்டிகளில் நன்றாக ஆடும் பழக்கத்தைக் கொண்டவர் ரோகித் சர்மா இவருக்கும் அந்த இடத்தை கொடுக்கலாம்.
ஹனுமா விஹாரி :
இவர் ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் ஆடிக் கொண்டிருக்கிறார். ஆனால் ஆறாவது இடத்தில் ஆடுகிறார். உள்ளூர் போட்டிகளில் நன்றாக ஆடி இருக்கும் இவர் 6,900 ரன்கள் குவித்திருக்கிறார் இவருக்கும் அந்த இடத்தில் ஆட வாய்ப்பு கொடுக்கலாம்.
ரிஷப் பந்த் :
இந்த வருட ஐபிஎல் தொடரில் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை என்றாலும் டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக ஆடக்கூடியதில் வல்லவர். இங்கிலாந்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சதம் அடித்திருக்கிறார் இவருக்கும் அந்த இடத்தை கொடுக்கிற வாய்ப்பிருக்கிறது.