இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அக்டோபர் 19ஆம் தேதி துவங்கும் அத்தொடரில் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா கடைசி முறையாக ஆஸ்திரேலியாவில் விளையாடுகிறார்கள் என்று நம்பப்படுகிறது. அதனால் அவர்களுடைய ஆட்டத்தைப் பார்க்க இரு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில் இத்தொடரில் விராட் கோலி படைக்க வாய்ப்புள்ள சாதனைகளைப் பார்ப்போம்:
1. இத்தொடரில் 54 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் 2வது அதிக ரன்களை குவித்த வீரர் என்ற இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாராவை முந்தி விராட் கோலி சாதனை படைப்பார். அந்தப் பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர்: 18426
2. குமார் சங்ககாரா: 14234
3. விராட் கோலி: 14181
காத்திருக்கும் சாதனை பட்டியல்:
2. விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 51 சதங்கள் அடித்துள்ளார். மறுபுறம் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 51 சதங்கள் அடித்துள்ளார். எனவே இத்தொடரில் இன்னுமொரு சதமடிக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட ஃபார்மட்டில் (ஒருநாள்) அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை சச்சின் டெண்டுல்கரை முந்தி விராட் கோலி படைப்பார்.
3. சச்சின் டெண்டுல்கர் ஒருநாள், டி20 போட்டிகளில் முறையே 18436, 10 என மொத்தம் 18536 ரன்கள் குவித்துள்ளார். விராட் கோலி 14181, 4188 என மொத்தம் 18369 ரன்கள் அடித்துள்ளார் எனவே ஆஸ்திரேலியா தொடரில் இன்னும் 77 ரன்கள் அடித்தால் சர்வதேச வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை உடைத்து விராட் கோலி புதிய உலக சாதனை படைப்பார்.
சேஸ் மாஸ்டர்:
4. சேஸ் மாஸ்டர் என்று அனைவராலும் போற்றப்படும் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டிகளில் 5988* ரன்களை அடித்துள்ளார். எனவே இத்தொடரில் சேசிங் வெற்றியில் இன்னும் 2 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டிகளில் 6000 ரன்களை அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை விராட் கோலி படைப்பார்.
இதையும் படிங்க: ஃபிளைட்டில் இல்லாத ஷமி சொல்றது உண்மையல்ல பொய்.. 6 மாதத்தில் மாறினால் கதை மாறும்.. அகர்கர் பதிலடி
5. அதே போல இந்தியாவுக்கு வெளியே விராட் கோலி மொத்தம் 29 சதங்கள் அடித்துள்ளார். எனவே இத்தொடரில் இன்னும் ஒரு சதம் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் 30 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையையும் விராட் கோலி படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.



