விஜய் ஷங்கருக்கு இந்திய அணியில் இடம்கிடைக்காமல் போக இதுதான் காரணமாம் – விவரம் இதோ

Vijay-Shankar
- Advertisement -

தமிழக வீரரும் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஆல்ரவுண்டரான விஜய் சங்கர் உலக கோப்பை தொடரின் போது இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். அதன்பிறகு தற்போது வரை அவர் இந்திய அணியில் விளையாடவில்லை. மேலும் அணி தேர்வில் கூட அவரது பெயர் பரிசீலனைக்கு கூட இடம் பெறவில்லை.

Vijay Shankar

- Advertisement -

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வங்கதேச அணிக்கு எதிரான தொடருரில் கூட விஜய்சங்கர் பெயரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் அணியில் இடம்பிடிக்காததன் காரணம் தற்போது தெரியவந்துள்ளது. உலக கோப்பை தொடரில் நான்காவது வீரராக விளையாடிய விஜய் ஷங்கர் பெரிய அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

மேலும் பேட்டிங்கும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவரிடம் கிடையாது. சுமாராகவே பேட்டிங் செய்கிறார் மேலும் பந்துவீச்சிலும் கூடுதல் வேகம் இன்றி தவித்து வருகிறார். அவரைக் காட்டிலும் ஹார்டிக் பண்டியா இரு பிரிவிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவர் தொடர்ந்து அணியில் நீடிக்கிறார்.

தற்போது அறுவை சிகிச்சை காரணமாக அணியில் பாண்டியா இடம் பெறாததால் விஜய்சங்கர் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்கு பதிலாக தற்போது இளம் வீரரான ஷிவம் துபேக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் ஹசாரே கோப்பையில் விஜய் சங்கர் சிறப்பாக விளையாடினாலும் சர்வதேச போட்டிகளில் சொல்லிக்கொள்ளும்படி அவரது செயல்பாடு அமையவில்லை என்பதால் அவரை அணி நிர்வாகம் ஓரங்கட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement