இதனால் தான் நாங்கள் வென்றோம் – தோனி சொன்ன காரணம் என்ன தெரியுமா ?

Dhoni Postmatch Presentation
- Advertisement -

ஐ.பி.எல் வரலாற்றில் 7 வது முறையாக இறுதிப்போட்டிற்கு தகுதி பெற்றது தோனி தலைமையிலான சென்னை அணி. ஐபிஎல் தொடரின் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கம்பீரமாக இறுதி போட்டிக்கு நுழைந்துள்ளது சென்னை அணி. இந்த வெற்றி குறித்து பேசிய தோனி அணி வெற்றி பெற்றதற்கான காரணத்தை கூறி, சிறப்பாக விளையாடிய டூ பிளிசியையும் பாராட்டினார்.

DhoniPressMeet

- Advertisement -

நேற்று மும்பை, வான்கடே மைதானத்தில் நடைபெற்றே இந்த போட்டியில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபட்டது.இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 வர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை பெற்றிருந்தது.பின்னர் களமிறங்கிய சென்னை அணி கடகடவென விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும். சென்னை அணியின் டூ பிளிசி கடைசி வரை நின்று பொறுப்பாக விளையாடி சென்னை அணியின் வெற்றியை நிலைநாட்டினார்.

dup

இந்த போட்டிக்கும் பின்னர் பேசிய தோனி ” வெற்றி என்பது எப்போதும் மகிழ்ச்சியான ஒரு விடயம் தான். முதல் இரண்டு இடத்தில் இருப்பதால் உங்களுக்கு மறு வாய்ப்பு இருக்கிறது என்ற சுதந்திரத்தை தரும். நாங்கள் ஒரு வேலை தோல்வியடைந்திருந்தாலும் எங்களுக்கு மறு வாய்ப்பு ஒன்று இருந்திருக்கும்.எதிரணியில் சிறப்பாக பந்து வீசினார்கள், புவனேஸ்வர் குமார் சிறப்பாக பந்து வீசினார். அவருக்கு பக்கபலமாக ரஷீத் கானும் செயல்பட்ட்டார். ஒரு கட்டத்தில் எங்கள் அணியில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தது. மிடில் ஆர்டர்களில் 3, 4 விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் நாங்கள் சற்று சிரமப்பட வேண்டியதாக இருந்தது. இருந்தும் நாங்கள் வெற்றி பெற்று விட்டும். எங்கள் பந்துவீச்சில் எப்படி முன்னேற்ற வேண்டும் என்று எண்ணி பல மாற்றங்களை செய்தோம். நான் எந்த நேரத்தில், எந்த பந்துவீச்சாளர் ,எப்படி நமக்கு உதவுவார்கள் என்று அறிந்துகொள்ள பந்து வீச்சில் பல மாற்றம் செய்துகொண்டே வந்தேன்.அது ஒரு சில நேரங்களில் உங்களை வதைக்கும், ஆனால் தற்போது இந்த போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சாளர்கள் விளையாடுகின்றனர். டூ பிளிசி சிறப்பாக விளையாடினார், அவர் பல போட்டிகளில் விளையாடாமல் இருப்பது கடினமான விடயம் தான். ஆனால் உங்கள் மனதை தயார் செய்து கொண்டே இருங்கள் என்று நான் எப்போதும் கூறுவேன். அதிலிருந்து தான் அனுபவம் கிடைக்கும் மேலும் நீங்கள் உங்கள் பணி என்ன என்பதையும், நீங்கள் எப்படி அதில் பங்களிக்கலாம் என்று கண்கூடாக பார்ப்பீர்கள்.

dhoni teammeet

“எங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு இருக்கிறது என்பது தெரியும், இருப்பினும் நாங்கள் இதில் வெற்றிபெற்றதன் மூலம் நன்றக உணர்கிறோம். கடந்த 10 ஆண்டுகளாக ஒரு சிறந்த அணியாக விளையாடி வருகிறோம். இதற்கு முக்கிய காரணமே எங்கள் அணியில் உள்ள சிறப்பான சூழல் தான். ஆட்டக்காரர்கள் மற்றும் உடன் உள்ள ஊழியர்கள் இல்லை என்றால் உங்களால் ஒன்றும் செய்ய இயலாது. சிறப்பான சூழல் அமையவில்லை என்றல் ஆட்டக்காரர்கள் வேறு திசை மாறிவிடுவார்கள். ஆனால், எப்படியோ எங்கள் அணி வீரர்களை பாதையில் தாக்க வைத்துக் கொள்ள முடிந்தது ” என்று கூறியிருந்தார்.

Advertisement