- Advertisement -
உலக கிரிக்கெட்

தூங்கிட்டேன் மன்னிச்சுடுங்க.. 2024 டி20 உ.கோ இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வங்கதேச துணை கேப்டன் செய்த காரியம்

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை ரசிகர்களுக்கு விருந்து படைத்து நிறைவு பெற்றது. வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்றன. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தோல்வியை சந்திக்காமல் ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அத்துடன் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

அதனால் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா சரித்திரம் படைத்தது. முன்னதாக அந்தத் தொடரில் இந்தியா தங்களுடைய 2வது சூப்பர் 8 போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. அந்த போட்டியில் வழக்கம் போல வங்கதேசத்தை 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்தியா எளிதாக வென்றது.

- Advertisement -

சாரி மன்னிச்சுடுங்க:
ஆனால் அந்தப் போட்டியில் வங்கதேசம் ஆச்சரியப்படும் வகையில் தன்சிம் ஹசன், முஸ்தஃபிசூர் ரகுமான் ஆகிய 2 வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே களமிறங்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 3வது வேகப்பந்து வீச்சாளரான வங்கதேசத்தின் துணை கேப்டன் தஸ்கின் அகமது விளையாடவில்லை. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக ஹோட்டலில் தஸ்கின் அகமது நன்றாக தூங்கி விட்டதாக தெரிய வந்துள்ளது.

அதனாலேயே அணி பேருந்தை தவறவிட்ட அவர் கடைசியில் இந்தியாவுக்கு எதிராக விளையாட முடியாமல் போனதாகவும் க்ரிக்பஸ் இணையத்தில் அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது. கடைசியில் அதற்காக சக அணி வீரர்களிடம் தஸ்கின் அகமது மன்னிப்பு கேட்டதாகவும் தெரிய வந்துள்ளது. இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பெயர் வெளியிட விரும்பாத வங்கதேச வாரிய நிர்வாகி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அணிப் பேருத்தை தவற விட்ட பின் தஸ்கின் அணியில் சேர்ந்தார் என்பது உண்மைதான். ஆனால் அவர் ஏன் விளையாடவில்லை என்பதை பயிற்சியாளர் மட்டுமே சொல்ல முடியும். ஏனெனில் அவர் இந்தியாவுக்கு எதிராக விளையாடும் திட்டத்தில் இருந்தாரா இல்லையா என்பது தலைமைப் பயிற்சியாளருக்கு மட்டுமே தெரியும். ஒருவேளை அவருக்கும் பயிற்சியாளருக்கும் ஏதாவது பிரச்சனை இருந்திருந்தால் எப்படி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அடுத்தப் போட்டியில் அவர் விளையாடிருப்பார்”

இதையும் படிங்க: வேதனையை சொல்ல வார்த்தையே இல்ல.. இதற்கிடையே ஓய்வு வேறயா? ரெடியா இருக்கேன்.. மில்லர் அறிவிப்பு

“அத்துடன் போட்டியில் விளையாட நேரத்திற்கு எழுந்து வர தவறியதற்காக அவர் சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்டார். எனவே மேற்கொண்டு இதை பேசி பிரச்சினையாக்குவதற்கு ஒன்றுமில்லை” என்று கூறினார். இதைப் பார்க்கும் வங்கதேச ரசிகர்கள் துணை கேப்டனே இப்படி தூங்கிக் கொண்டு பொறுப்பின்றி இருந்தால் எப்படி நம்மால் வெல்ல முடியும்? என்று அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -