- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டி20 அணியில் கோலிக்கு ஓய்வு கொடுத்து ரோஹித் கேப்டனாக்க இதுதான் காரணமாம் – விவரம் இதோ

வங்கதேச அணி நவம்பர் மாதம் துவக்கத்தில் இந்தியா வந்து 3 டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இந்த தொடருக்கான டி20 அணி நேற்று தேர்வுக்குழு தலைவர் பிரசாத் தலைமையில் அறிவிக்கப்பட்டது.

இதில் தொடர்ச்சியாக விளையாடி வரும் இந்த அணியின் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது கோலிக்கு பதிலாக ரோஹித் கேப்டனாக செய்யப்பட இருக்கும் காரணம் வெளியாகியுள்ளது.

- Advertisement -

உலக கோப்பை தொடருக்குப் பின் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உலக கோப்பை தொடரில் அடைந்த தோல்வி காரணமாக கேப்டன்ஷிப் பறிபோகும் நிலையில் இருந்த கோலி அதனை தக்கவைக்க வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தானாக விரும்பி இடம் பெற்றார். அதனை தொடர்ந்து வந்து தொடர்களிலும் அடுத்தடுத்து கோலி இந்திய அணியின் கேப்டனாக தொடர்ந்தார்.

கோலியின் தலைமையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் மூன்று வகையான கிரிக்கெட்டிற்கும் கோலி கேப்டனாக இருக்க கூடாது ஏதாவது ஒரு வடிவத்தில் கேப்டனாக ரோஹித்தை தேர்வுசெய்யலாம் என்று பல முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் கூறிவந்தனர்.

இந்நிலையில் தொடர்ச்சியாக ஓய்வின்றி போட்டிகளில் பங்கேற்று வரும் கோலி தற்போது அவராக விரும்பி பங்களாதேஷ் டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். இதன்காரணமாக ரோகித் இந்திய அணியின் டி20 கேப்டனாக செயல்பட உள்ளார். மேலும் ஐபிஎல் போட்டிகளில் கோலியை விட ரோகித் சிறப்பான ரெக்கார்டை வைத்திருப்பதால் ரோகித் டி20 அணிக்கு ரோஹித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by