ரசிகர்கள் கொந்தளித்தாலும் என்ன ஆனாலும் ரிஷப் பண்ட் நீக்கப்படாததற்கு காரணம் இது தான் – இப்படி ஒன்னு இருக்கா

Rishabh Pant
- Advertisement -

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் 1 – 0* என்ற கணக்கில் பின்தங்கியுள்ள இந்தியா கடைசி போட்டியில் வென்றால் மட்டுமே குறைந்தபட்சம் சமன் செய்ய முடியும் என்ற பரிதாபத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்ற டி20 தொடரிலும் தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் வாய்ப்புக்காக தவமாய் தவமிருந்து காத்துக் கிடக்கும் சஞ்சு சம்சனுக்கு வாய்ப்பு கொடுக்காத இந்திய அணி நிர்வாகம் வழக்கம் போல சொதப்பி வரும் ரிசப் பண்ட்டுக்கு வாய்ப்பு கொடுத்து வருவது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

Rishabh Pant Sanju Samson

- Advertisement -

குறிப்பாக 2017இல் அறிமுகமானது முதல் இப்போது வரை டி20 கிரிக்கெட்டில் 65 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்பை பெற்றும் எப்போதும் ரசிகர்கள் மனதில் நிற்கும் அளவுக்கு சிறப்பாக செயல்படாத ரிஷப் பண்ட் நியூசிலாந்து டி20 தொடரில் மீண்டும் ராஜாவைப் போல் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக வாய்ப்பு பெற்று மீண்டும் சொதப்பினார். மறுபுறம் அவரை விட இந்த வருடம் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டிலும் அதிக ரன்களையும் குவித்துள்ள சஞ்சு சாம்சன் பெஞ்சில் அமர்ந்திருந்தார்.

வருங்காலமும் சொதப்பலே:

இருப்பினும் ஒருநாள் தொடரில் வாய்ப்பு பெற்ற அவர் முதல் போட்டியில் கில் – தவான் ஆகியோர் 124 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தும் ரிஷப் பண்ட் 10, சூரியகுமார் 4 என முக்கிய வீரர்களின் சொதப்பலால் 160/4 என்ற நிலையில் தடுமாறிய இந்தியாவை ஸ்ரேயாஸ் ஐயருடன் 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 36 ரன்கள் எடுத்து 306 ரன்கள் குவிக்க உதவினார். அந்த நிலையில் முதல் போட்டியில் 6வது பவுலர் இல்லாததால் சந்தித்த தோல்வியை 2வது போட்டியில் தவிர்ப்பதற்காக அவரை அதிரடியாக நீக்கிய இந்திய அணி நிர்வாகம் தீபக் ஹூடாவை தேர்வு செய்தது.

1. ஆனால் இங்கே காலம் காலமாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சொதப்பி வரும் ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் செய்யக்கூடிய சஞ்சு சாம்சனை தேர்வு செய்திருக்கலாமே என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. இருப்பினும் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சம் என்பது ரிஷப் பண்ட்டுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. அதை விட இத்தொடரில் அவர் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். பொதுவாக கேப்டன்கள் சுமாராக செயல்பட்டாலும் அவர்களை நீக்க மாட்டார்கள்.

- Advertisement -

2. அதே போலவே சுமாராக செயல்பட்டாலும் ரசிகர்கள் கொந்தளித்தாலும் என்ன ஆனாலும் இந்த தொடரில் துணை கேப்டனாக ரிசப் பண்ட் தொடர்ந்து வாய்ப்பு பெற்று வருகிறார். அதுமட்டுமல்லாமல் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோகித் சர்மா 35 வயது கடந்து விட்டதால் கேஎல் ராகுல், ரிசப் பண்ட் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகிய 3 பேரையும் அவரது தலைமையில் அடுத்த தலைமுறை கேப்டனாக வளர்க்க திட்டமிட்டுள்ளதாக பிசிசிஐயும் தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மாவும் கடந்த வருடம் அறிவித்தது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.

Keshav-Maharaj-and-Rishabh-Pant

3. அதன் காரணமாகவே கடந்த ஜூலை மாதம் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட் இந்தத் தொடரில் துணை கேப்டனாக செயல்பட்டு வருகிறார். மொத்தத்தில் அவரை வருங்கால கேப்டனாக உருவாக்குவதற்கு பிசிசிஐ நினைப்பதாலேயே எது நடந்தாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறது என்பதே நிதர்சனமாகும்.

- Advertisement -

4. அது போக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்கனவே சாதித்து காட்டியுள்ள அவரை இந்தியாவின் அடுத்த தலைமுறை விக்கெட் கீப்பராக உருவாக்க அணி நிர்வாகம் முயற்சிக்கிறது. அதனாலேயே கொந்தளிக்கும் ரசிகர்களின் கண்துடைப்புக்காக மட்டும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு பெற்ற சஞ்சு சாம்சன் அடுத்ததாக நடைபெறும் வங்கதேச தொடரில் கழற்றி விடப்பட்டுள்ளார்.

Dravid Rishabh Pant

5. மறுபுறம் சமீபத்திய டி20 உலக கோப்பையிலும் இதே நியூசிலாந்து சுற்றுப்பயணத்திலும் சொதப்பலாக செயல்பட்டும் அடுத்ததாக நடைபெறும் பங்கதேச தொடரில் ரிஷப் பண்ட் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளார்.

6. பொதுவாக மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். ஆனால் சௌரவ் கங்குலி தலைமையிலான பிசிசிஐ ரோஜர் பின்னி தலைமையில் மாறியும் ஹர்திக் பாண்டியா போன்ற புதிய கேப்டன் வந்தும் ரிஷப் பண்ட் – சஞ்சு சாம்சன் விஷயத்தில் எதுவுமே மாறவில்லை என்பது வேதனையாகும்.

Advertisement