ராயுடுவிற்கு பதிலாக ரிஷப் பண்டை தேர்வு செய்ததன் காரணம் இதுதான் – தேர்வுக்குழு தலைவர் விளக்கம்

Prasad
- Advertisement -

உலகக்கோப்பை தொடரில் அம்பதி ராயுடுவின் பெயர் நிச்சயம் இடம் பெறும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் பலர் எதிர்பார்த்தனர். ஆனால் இறுதி வரை அவர் அணியில் இடம்பெறாதது பலரையும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியது. இது குறித்து யுவராஜ் சிங்க் கூட ஒரு முறை இந்திய கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்துள்ளார்.

- Advertisement -

ரசிகர்களுக்கே இவ்வளவு ஆர்வம் இருக்கும்போது அம்பதி ராயுடுவிற்கு எவ்வளவு ஆர்வம் இருந்திருக்க வேண்டும்? ஆனால் அவருக்கு பதிலாக விஜய் சங்கர் அணியில் இணைக்கப்பட்டார். இதனால் கடுப்பான அம்பதி ராயுடு கிண்டலாக ட்வீட் ஒன்றை வெளியிட்டார். அதனை தொடர்ந்து மாற்று வீரர்கள் பட்டியலில் அம்பதி ராயிடுவின் பெயர் இடம் பெற்றது. ஒருகட்டத்தில் தவான், விஜய் சங்கர் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இருந்து விலகிய போது, மாற்று வீரர்களாக ரிஷப் பண்ட்டும், மாயங்க் அகர்வாலும் இந்திய அணிக்காக விளையாட இங்கிலாந்து அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதனால் மிகுந்த கோவம் கொண்ட அம்பதி ராயுடு, யாரும் எதிர்பாராத வண்ணம், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தான் ஓய்வு பெறுவதாக ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பை கேட்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அரை இறுதி போட்டியில் அம்பதி ராயுடு விளையாடி இருந்தால் போட்டியின் போக்கு நிச்சயம் மாறி இருக்கும் என்று பலரும் இன்றுவரை விமர்சித்து வருகின்றனர்.

rayudu

இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த பின்னர், தேர்வு குழுவின் தலைவரான எம்.எஸ்.கே பிரசாத் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அம்பதி ராயுடு குறித்த கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், இந்திய அணியில் இடம் பெறாததை அடுத்து அம்பதி ராயுடு வெளியிட டிவீட்டை கண்டு நான் ஆரம்பத்தில் ரசித்தேன். ஆனால் அணியின் தேவை என்று ஒன்று இருக்கிறது, பேட்டிங் வரிசை மற்றும் அணியின் கலவை ஆகியவற்றை அடிப்படையில் அம்பதி ராயுடுவை தேர்வு செய்ய முடியாமல் போனது.

Pant

ஒரு சிலர், நாங்கள் அவருக்கு எதிராக ஒருதலை பட்சமாக முடிவெடுத்தோம் என்று விமர்சிப்பது தவறு. நாங்கள் எப்போதும் அணியின் தேவையை கருத்தில் கொண்டே முடிவுகளை எடுக்கிறோம். ஒரு கிரிக்கெட் வீரராக ராயிடுவின் மன உளைச்சலை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு கட்டத்தில் தவான் காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறியபோது இடது கை பேட்ஸ்மேன் அணியில் இடம் பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம். அதனாலேயே ரிஷப் பண்ட்டை நாங்கள் தேர்வு செய்து அனுப்பினோம் என்று அவர் கூறினார்.

Advertisement