- Advertisement -
இந்திய கிரிக்கெட்

முதல் இலங்கை ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்தது ஏன்? பிசிசிஐ சோகமான அறிவிப்பு

இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகஸ்ட் இரண்டாம் தேதி துவங்கியது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் இலங்கையை அதனுடைய சொந்த மண்ணில் ஒய்ட்வாஷ் செய்து இந்தியா வென்றது. அதைத்தொடர்ந்து நடைபெறும் ஒருநாள் தொடரில் முதல் போட்டி கொழும்பு நகரில் துவங்கியது.

அதில் 2024 டி20 உலகக் கோப்பை வென்ற கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா களமிறங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணிக்கு விராட் கோலி, கே.எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற நட்சத்திர வீரர்கள் மீண்டும் திரும்பினார்கள்.

- Advertisement -

பிசிசிஐ அறிவிப்பு:
முன்னதாக அந்தப் போட்டியில் இந்திய அணியினர் தங்களுடைய கையில் கருப்பு பட்டையை அணிந்து விளையாடினர். அதாவது கடந்த புதன்கிழமை அன்று இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் அனுஷ்மான் கைக்வாட் அவர்கள் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். எனவே அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்திய அணி கருப்பு பட்டை அணிந்து விளையாடுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

1974 – 1987 வரையிலான காலகட்டங்களில் அவர் 40 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடினார். குறிப்பாக 1976இல் ஜமைக்காவில் வெறித்தனமான வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர் அடித்த 81 ரன்கள் மறக்க முடியாது. அதே போல 1983ஆம் ஆண்டு ஜலந்தரில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 671 நிமிடங்கள் பேட்டிங் செய்த அவர் 201 ரன்கள் குவித்ததை அந்த கால ரசிகர்களால் மறக்க முடியாது.

- Advertisement -

அந்த வகையில் இந்தியாவுக்காக மொத்தம் 55 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2154 ரன்களையும் 3 விக்கெட்டுக்களையும் எடுத்துள்ளார். அத்துடன் 200 உள்ளூர் முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 12000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். மேலும் 1997 – 2000 வரை தலைமை பயிற்சியாளராகவும் செயல்பட்ட அவருடைய தலைமையில் சச்சின் அதிரடியில் 1999 கோகோகோலா கோப்பையை இந்தியா வென்றது.

இதையும் படிங்க: 6, 6, 6, 6.. இதுக்கு தான் பயப்படுறீங்களா? குருட்டுத்தனமாக பேசிய பாகிஸ்தான் நிரூபருக்கு ஹர்பஜன் பதிலடி

அத்துடன் 2018 காலகட்டங்களில் அவர் பிசிசிஐ நிர்வாகத்திலும் முக்கிய பொறுப்பில் இருந்தார். இருப்பினும் சமீப காலங்களாக உடல் நலம் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் 71 வயதில் இயற்கை எய்தினார். எனவே அவரது குடும்பத்தினருக்கு பிசிசிஐ மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஜாம்பவான்கள் கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட ஏராளமான முன்னாள் இந்நாள் வீரர்களும் ரசிகர்களும் இரங்கலும் ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -