தோனியின் மீது பி.சி.சி.ஐ இவ்வளவு கறாராக அழுத்தம் கொடுக்க இவர்கள்தான் காரணமா ?- பின்னணி விவரம் இதோ

MSdhoni
Advertisement

இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. அடுத்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் கலந்து கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

Kohli

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக தோனி இடம்பெற வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம் இடம் பிடித்தாலும் அவர் பேட்ஸ்மேனாகவே களமிறங்குவார். ரிஷப் பண்ட் கீப்பராக செயல்படுவார். உலககோப்பையில் தோனியின் மெதுவான ஆட்டம் குறித்து பல விமர்சனங்கள் தோனியின் மீது எழுந்தன. அதனை தொடர்ந்து தோனியை ஓய்வு பெற வைக்க பி.சி.சி.ஐ தொடர்ந்து அழுத்தம் அளித்து வருகிறது. இந்நிலையில் தோனி மீது நிர்வாகம் இவ்வளவு அழுத்தம் கொடுக்க என்ன காரணம் என்று தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

- Advertisement -

இந்த உலக கோப்பை தொடரில் தோனியின் ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சச்சின் சேவாக் கங்குலி போன்றவர்கள் விமர்சித்திருந்தனர். மேலும் பிசிசிஐயின் வட்டாரத்திற்கு நெருங்கிய தொடர்புடைய இவர்கள் மூவரும் தோனியின் ஓய்வுக்காக அழுத்தத்தை கொடுத்து வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.ஏனெனில் இவர்கள் மூவருமே தோனி கேப்டன்சியில் இருந்தபோது அணியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

sachinshewag

ஆனால் இது முழுவதும் உண்மை கிடையாது ஏனெனில் தோனி ஒன்றும் இளம் வீரர் கிடையாது. அவருக்கு தற்போது 38 வயதாகிறது. மேலும் பத்து வருடத்திற்கு முன்பு அவரிடம் இருந்த துடிப்பு தற்போது குறைவாகவே உள்ளது. மேலும் அவரின் ஆட்டத்திறனும் சற்று மங்கிய நிலையில் உள்ளதால் அவரை இந்திய அணியில் இருந்து நீக்க பி.சி.சி.ஐ திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement