இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியில் இடம் பிடிப்பது சற்று சிரமமாக உள்ளது. மேலும் அவரது ஓய்வு குறித்த பேச்சும் தொடர்ந்து இருந்து வரும் நிலையில் தோனி ஓய்வு குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் நேற்று விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டார். அந்த பதிவின் மூலம் ரசிகர்களிடையே தோனி ஓய்வு அறிவிப்பை அறிவிக்கப் போவதாகவும் நேற்று இரவே அறிவிப்பார் என்றும் வதந்தி பரவியது.
மேலும் தோனி ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட இரவு 7 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அது முற்றிலும் பொய்யான தகவல் என்பது உறுதியாகியுள்ளது. யாரோ சிலரால் பரப்பப்பட்ட வதந்தி என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. ஏனெனில் தோனி ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று கூறிய நிலையில் தோனி தற்போது இந்தியாவில் இல்லை.
While Media was speculating and the rumours spreading around, #Dhoni was busy launching helicopters in a golf course yesterday. ????️⛳#PicOfTheDay #MSDhoni @msdhoni pic.twitter.com/FIarK2d2on
— MS Dhoni Fans Official (@msdfansofficial) September 13, 2019
அவர் அமெரிக்காவில் ஓய்வு எடுத்துக் கொண்டு வருவதாகவும் மேலும் அங்கு கோல்ப் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. எனவே தோனி ஓய்வு அறிவிப்பு குறித்து வந்த செய்திகள் அனைத்தும் வதந்தி என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.