தோனியை ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்க காரணம் இதுதான் – வெளியான அதிகாரபூர்வ தகவல்

Dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம் ஆன பிசிசிஐ வருடம்தோறும் இந்திய அணி வீரர்களுக்கான சம்பளம் குறித்த ஒப்பந்த பட்டியலை வெளியிடும். அதன்படி இந்த வருடத்திற்கான (அக்டோபர் 2019 – செப்டம்பர் 2020) சம்பளப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

dhoni

அதன்படி ஏ ப்ளஸ் பிரிவில் உள்ள ஊழல் வீரர்களுக்கு 7 கோடி, ஏ கிரேட் வீரர்களுக்கு 5 கோடி, பி கிரேட் வீரர்களுக்கு 3 கோடி, சி கிரேட் பட்டியலில் உள்ளவர்களுக்கு ஒரு கோடி என்று சம்பள அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் ஏ ப்ளஸ் பட்டியலில் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஏ பிரிவில் அஸ்வின், ஜடேஜா, புவனேஸ்வர் குமார், புஜாரா, கே எல் ராகுல், ஷிகர் தவான், இசாந்த் சர்மா, குல்தீப் யாதவ் மற்றும் பண்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பி பிரிவில் உமேஷ் யாதவ், பாண்டியா, அகர்வால், சாஹல் மற்றும் சஹா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். சி பிரிவில் கேதார் ஜாதவ், சைனி, தீபக் சாஹர், மனிஷ் பாண்டே, விகாரி, ஷர்துல் தாகூர் மற்றும் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

dhonistand

இந்த பட்டியலில் எந்த ஒரு பிரிவிலும் தோனியின் பெயரை பிசிசிஐ இணைக்கவில்லை. இதனால் ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து தோனி நீக்கப்பட்டுள்ளது உறுதியானது. இந்நிலையில் தோனியின் இந்த நீக்கம் குறித்து பிசிசிஐ வட்டாரத்திலிருந்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பெயர் வெளியிடாத பிசிசிஐ நிர்வாகி கூறியதாவது : தோனிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட மாட்டாது என்பது அவருக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. குறைந்தது 3 டி20 போட்டிகளிலாவது இந்த சீசனில் அவர் விளையாடி இருக்கவேண்டும்.

- Advertisement -

Ms Dhoni Bhuvneshwar-Kumar

ஆனால் அவர் கடந்த ஆறு மாதங்களாக ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இதன் காரணமாக அவர் சம்பளப்பட்டியலில் இருந்து தகுதி முறையில் இருந்து அவர் நீக்கப்பட்டு ஒப்பந்த பட்டியலில் பெயர் சேர்க்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. தோனி மட்டுமில்லாது தினேஷ் கார்த்திக், அம்பதி ராயுடு மற்றும் கலீல் அகமது ஆகியோரை இந்தப் பட்டியலில் இருந்து பிசிசிஐ நீக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.