இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தமிழக வீரரான வி.பி சந்திரசேகர்(வயது 57) கடந்த மாதம் தனது மயிலாப்பூரில் இருக்கும் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவர் இந்திய அணிக்காக 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடதக்கது.
மேலும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு வர்ணனையாளர், பயிற்சியாளர் மற்றும் டி.என்.பி.எல் அணி உரிமையாளர் போன்ற பல கிரிக்கெட் தொடர்பான பணிகளை செய்து வந்தார். 1961ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி சென்னையில் பிறந்த இவர் தமிழக அணிக்காகவும், இந்திய அணிக்காக கிரிக்கெட் போட்டியில் விளையாடி உள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டு மாடியில் சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கான காரணத்தை போலீஸார் பல்வேறு வகையில் விசாரித்து வந்தனர். அவரின் தற்கொலை குறித்து தற்போது காவல்துறை அதிகாரிகள் வேறு கட்டத்தில் விசாரித்து வருகின்றனர். அதாவது டிஎன்பிஎல் தொடரின் காஞ்சி பிரான்ஸ் அணியின் உரிமையாளராக இருந்த அவர் அந்த அணிக்காக கடன் வாங்கியதில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது நிதி நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டாரா என்று விசாரணை நடந்தது.
இந்நிலையில் தற்போது டிஎன்பிஎல் தொடரில் சூதாட்ட பிரச்சனை நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது அதனால் அவர் சூதாட்டக்காரர்கள் பிடியில் சிக்கி பெட்டிங் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டிருப்பாரோ என்ற நோக்கில் விசாரணை நடந்துள்ளது. மேலும் அவருடைய செல்போன் வாட்ஸ் அப் உரையாடல்களும் சோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.