கோலிக்கும் அஷ்வினுக்கும் இடையே இதுதான் பிரச்சனையா ? அதனால் தான் அஷ்வினை நீக்கினாரா ?- கோலி

kohli-ashwin
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அணியில் சேர்க்கப்படாததற்கு ரசிகர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக சிறப்பான சாதனைகளை அஸ்வின் வைத்துள்ளார்.

ashwin

- Advertisement -

மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அவர் 11 டெஸ்ட் போட்டிகளில் 60 விக்கெட் மற்றும் 552 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெறாமல் போனதற்கு காரணம் கோலிதான் என விவரங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்த அஸ்வின் ஒருநாள் போட்டிகளில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். அதுவும் அவர் சிறப்பாக பந்து வீசி வந்த வேளையிலேயே அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

அதன் பிறகு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடரின் போது காயம் காரணமாக அவர் அணியில் விளையாட வில்லை. அதனால் அவர் பின் நிலைப்படுத்தப்பட்டு அவருக்கு பதிலாக கோலியின் விசுவாசியான குல்தீப்புக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. மேலும் கோலி அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து அஸ்வினை புறக்கணிப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

ashwin 2

மேலும் அஸ்வினுக்கும் கோழிக்கும் ஏதோ பிளவு இருக்கிறது என்றும் அதன் காரணமாக தான் கோலி இவ்வாறு செய்து வருகிறார் என்றும் மேலும் டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் அஸ்வினை கோலி கொஞ்சம் கொஞ்சமாக புறக்கணிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ASHWIN

இதுவரை 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 342 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இவ்வளவு குறைவான போட்டியில் யாரும் சர்வதேச அளவில் இவ்வளவு விக்கெட்டுகளை வீழ்த்தியது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் தொடர்ந்து பந்துவீச இருந்தால் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பட்டியலில் முன்னிலைக்கு செல்லவும் வாய்ப்பு இருந்த நிலையில் கோலி அவருக்கு தொடர்ந்து வாய்ப்பை மறுத்து வருவது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

Advertisement