சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி போட்டி துவங்குவதில் ஏற்பட்ட தாமதம் – காரணம் என்ன தெரியுமா ?

csk vs rcb
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 35-ஆவது போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், மஹேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. ஏற்கனவே சிறப்பான பார்மில் இருக்கும் சிஎஸ்கே தங்களது வெற்றியை தொடர நினைக்கும் என்பதினாலும், ஏற்கனவே இந்த ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரு கட்டாயத்தில் பெங்களூரு அணி மோதுவதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது.

rcbvscsk

- Advertisement -

வழக்கமாக இந்திய நேரப்படி சுமார் ஏழு முப்பது (7.30) மணிக்கு துவங்கும் இந்தப் போட்டியானது இன்று சற்று தாமதமாகவே ஆரம்பித்தது. ஏனெனில் ஷார்ஜா மைதானத்தில் ஏற்பட்ட புழுதிப் புயல் காரணமாக டாஸ் வீசுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதன் காரணமாகவே தற்போது போட்டியும் சற்று தாமதமாக தொடங்கியுள்ளது. இருப்பினும் இந்த போட்டியில் எந்த வித மாற்றமும் இன்றி 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக தற்போது இந்த போட்டி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டி தோனி மற்றும் கோலி ஆகிய இருவருக்கும் இடையே நடக்கும் போட்டி என்பதால் தற்போது ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement