சி.எஸ்.கே – வுக்கு போட்டியாக களமிறங்கும் ஆர்.சி.பி பயிற்சி எப்போது துவங்கும் தெரியுமா ? – விவரம் இதோ

Rcb

இந்த வருடம் 13 ஆவது ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 29ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி கொண்டு வருகின்றன. குறிப்பாக இந்திய அணியில் இல்லாத வீரர்களை கொண்ட ஒரு சில அணிகள் தற்போது தங்களது பயிற்சி முகாம்களை துவங்கிவிட்டன.

Ipl cup

இந்நிலையில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி மார்ச் 21ஆம் தேதி முதல் தங்களது பயிற்சிகளை துவங்க உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தகவலை அந்த அணியின் புதிய இயக்குனர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார். பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏப்ரல் 1ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடுகிறது.

இதற்கு இடைப்பட்ட பத்து நாட்களில் அனைத்து சர்வதேச வீரர்களும் முகாமிற்கு வந்து பயிற்சி செய்வார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த முறையில் பெங்களூரு அணியில் ஆரோன் பின்ச் , டேல் ஸ்டெயின் போன்ற பல நட்சத்திர வீரர்களை அந்த அணி எடுத்துள்ளது. எப்படி இருந்தும் வருடா வருடம் நல்ல வீரர்களை கையில் வைத்துக்கொண்டு ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்ற முடியாமல் இருப்பதே பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி ஆகும்.

ஆனால் இம்முறை நிச்சயம் பெங்களூரு அணி வழக்கம்போல் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பாக்கப்படுகிறது. மேலும் பல ஆண்டுகளாக ஐ.பி.எல் தொடரை கைப்பற்ற காத்திருக்கும் பெங்களூரு அணி இந்த முறையும் கோப்பையை கைப்பற்ற முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -
- Advertisement -