இந்த வருட ஐ.பி.எல் தொடரில் கோப்பையை கைப்பற்ற காத்திருக்கும் ஆர்.சி.பி – பின்னணி இதோ

Abrcb
- Advertisement -

ஐபிஎல் தொடர் வந்துவிட்டாலே “ஈ சாலா கப்பு நம்தே” என்று ஆர்சிபி ரசிகர்களை அனைத்து அணி ரசிகர்களும் வெறுபெற்றுமளவுக்கு அளவுக்கு அவர்களது பெர்ஃபாமன்ஸ் இருக்கும். அவர்களது கெட்ட நேரமோ என்னவோ தெரியவில்லை இதுவரை நடந்து முடிந்துள்ள 13 ஐபிஎல் தொடர்களில் ஒரு கோப்பையை கூட அவர்கள் வென்றதில்லை.ஜாம்பவான் வீரர்கள் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் , கிறிஸ் கெயில் மற்றும் ஷேன் வாட்சன் ஆடியும் கூட அவர்கள் கோப்பையை வென்றதில்லை.

RCBvsKXIP

- Advertisement -

2009, 2011, 2016 இந்த மூன்று வருடங்களில் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டுள்ளனர். அதன்பிறகு தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் லீக் ஆட்டங்களிலேயே வெளியேறிவிட்டது. பின்னர் சென்ற வருடம் தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதிலும் எலிமினேட்டர் சுற்றில் வெளியேறிவிட்டது. இதையெல்லாம் கணக்கில் கொண்டு புதிய அணியாக இந்த வருடம் கோப்பையை வென்று தீரவேண்டும் என்கிற தீர்மானத்துடன் ஆர் சி பி அணி களமிறங்கியுள்ளது.அதன்படி பார்த்தால் இந்த வருடம் ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது.

ஆர்சிபி அணிக்கு கடந்த வருடங்களாகவே மேட்ச் பினிஷிங் செய்யக்கூடிய வீரர்களை தேடி வந்த வண்ணமே இருந்தது. ஆனால் இந்த வருடம் அதற்கு அவசியமில்லை. ஏலத்தில் வாங்கப்பட்ட டேனியல் கிறிஸ்டியன் மற்றும் டேனியல் சாம்ஸ் இறுதி ஓவரில் நின்று அதிரடி காட்டக்கூடிய அதிரடி வீரர்கள் ஆவார்கள். டேனியல் கிறிஸ்டியன் பல டி20 லீக் ஆட்டங்களில் ஆடி உள்ளவர். தென்னாப்பிரிக்கா இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற ஊர்களில் நடத்தப்பட்டுள்ள டி-20 தொடர்களில் ஆடி கோப்பையை வென்று இருக்கிறார்.

rcb

அவரது வருகையை இந்த அணிக்கு பலம் கூட்டும். மேலும் டேனியல் சாம்ஸ் பிபிஎல் தொடரில் திறந்த பார்மில் இருந்தார். அவரும் இந்த அணிக்கு பலத்தை கூட்டுவார். ஆல்ரவுண்டர் பொறுத்தவரையில் இவர்கள் இருவரும் அதை சரியாக செய்வார்கள். அதேபோன்று படிக்கல் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரில் தொடர்ச்சியாக 4 சதங்கள் அடித்து அசத்தலான வகையில் அதிரடி பார்மில் உள்ளார். ஓபனிங்கை பொறுத்தவரை அவர் அதிரடி காட்டுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

- Advertisement -

மேலும் வாஷிங்டன்சுந்தர் மற்றும் முகமது சிராஜ் தற்போது நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் சிறந்த பார்மில் உள்ளார் என்பது அனைவரும் அறிவர். அதுபோல சாஹலும் தனது சுழற்பந்து வீச்சால் எதிரணியை கதிகலங்க செய்வார். இந்திய வீரர்கள் பொருத்தவரையில் இவர்களது பெர்ஃபாமன்ஸ் அதிரடியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்சிபி அணியில் கோலி மற்றும் டிவிலியர்ஸ்கே அதிக பணிச்சுமை இருக்கும், அணியை கடைசி வரை கொண்டு போகும் பொறுப்பு அவர்களிடமே கடைசியில் போய் சேரும். ஆனால் இந்த முறை அவர்களது பணிச்சுமை சற்று குறைய வாய்ப்புள்ளது.

rcb

ஏலத்தில் வாங்கப்பட்ட அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் , ஆல்ரவுண்டர் கைல் ஜேமிசன் , டேனியல் கிறிஸ்டியன் டேனியல் சாம்ஸ் ஆகியோருடன் முன்னரே இருந்த ஆடம் ஜாம்பா மற்றும் இளம் வீரர் ஜோஸ் பிளிப்பி ஆகியோர் தங்களது பணிகளையும் மேலும் தங்களது டி20 எக்ஸ்பீரியன்ஸை சரிவர கொடுத்தாலே போதும் ஆர்சிபி அணி இந்த வருடம் தனது முதல் கோப்பையை வெல்லும் என்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement