ஆர்.சி.பி அணி ஒப்பந்தம் செய்துள்ள சிங்கப்பூர் வீரர். யார் இந்த டிம் டேவிட் – சுவாரசிய தகவல் இதோ

tim david 2
- Advertisement -

ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரில் பல வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் புதிய வீரர்களை பல அணிகளும் ஒப்பந்தம் செய்து வருகின்றன. அந்த வகையில் பெங்களூரு அணியில் விளையாடி வந்த வெளிநாட்டு வீரர்கள் ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்ட்ஸன், டேனியல் சாம்ஸ் மற்றும் பின் ஆலன் ஆகியோர் எஞ்சியுள்ள ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tim-David

- Advertisement -

இதன் காரணமாக தற்போது பெங்களூரு அணி மாற்று வீரர்களை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே சுழற்பந்து வீச்சாளரான ஜாம்பாவிற்கு பதிலாக சமீபத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் கலக்கிய இலங்கை அணியின் வீரரான சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹசரங்காவை தேர்வு செய்தது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆர்.சி.பி அணி வெளியிட்டு இருந்தது. அந்த வகையில் மேலும் சில வீரர்களை ஆர்சிபி அணி தெரிவு செய்துள்ளது.

அதில் முக்கிய வீரராக தற்போது ஆஸ்திரேலிய உள்ளூர் தொடர்களில் கலக்கி வரும் சிங்கப்பூரை பூர்வீகமாகக் கொண்ட டிம் டேவிட்டை ஆர்சிபி அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் சிங்கப்பூர் வீரர் ஒருவர் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி டிம் டேவிடை ஆர்சிபி அணி வாங்க காரணம் யாது ? அவர் யார் ? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன. அதற்கான தெளிவான விளக்கத்தை நாங்கள் இங்கே உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

tim david 1

சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த 25 வயதான டிம் டேவிட் சிங்கப்பூர் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் ஏற்கனவே 14 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பின்வரிசையில் இறங்கி அதிரடியாக விளையாடும் டேவிட் 558 ரன்கள் குவித்துள்ளார். பின்னர் சிங்கப்பூரில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்த அவர் குடியுரிமை பெற்று அங்கு நடைபெறும் டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த பிக் பேஷ் தொடரினை நீங்கள் கவனித்து இருந்திருந்தால் டிம் டேவிடின் அதிரடியை நீங்கள் கண்டிருக்க முடியும். பிக் பேஷ் தொடரில் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிக்காக கடந்த சீசனில் விளையாடிய டேவிட் தனது அதிரடியை தொடர் முழுவதும் காண்பித்தார். அதுமட்டுமின்றி தனது அணி துவக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து இக்கட்டை சந்திக்கும்போதெல்லாம் பின்வரிசையில் தனியாளாக நின்று பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். பல போட்டிகளை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றுள்ளார்.

tim david 3

இப்படி பேட்டிங்கில் அதிரடி காட்டும் டிம் டேவிட் பாகிஸ்தான் பிரீமியர் லீக்கிலும் விளையாடி வருகிறார். இதனால் பின்வரிசையில் அதிரடியாக ஒரு பினிஷர் ரோலில் விளையாட வைக்க ஆர்சிபி அணி அவரை ஒப்பந்தம் செய்துள்ளது. ஆஸ்திரேலியா போன்ற பெரிய மைதானங்களில் மிகப்பெரிய சிக்ஸர்களை அடிக்கும் திறமை கொண்ட டிம் டேவிட் நிச்சயம் இந்த ஐபிஎல் தொடரில் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தனது ஆதிக்கத்தை செலுத்துவார் என்பது உறுதி.

Advertisement