மும்பை, சென்னை கூட செய்யல ! வரலாற்றில் முதல் முறையாக பெங்களூரு நிர்வாகம் கொண்டுவந்துள்ள புதிய கெளரவம்

RCB
- Advertisement -

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை ஒரு கோப்பையை வெல்லவில்லை என்றாலும் ரசிகர்களிடையே மும்பை, சென்னை போன்ற அணிகளுக்கு ஈடாக அதிக புகழை பெற்று அணியாக கருதப்படுகிறது. கடந்த 2008இல் ஐபிஎல் தொடங்கப்பட்டபோது உள்ளூர் சூப்பர் ஸ்டாரான ராகுல் டிராவிட் கேப்டனாக செயல்பட்டார். அதன்பின் அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி ஆகியோர் கேப்டன்ஷிப் செய்த போதிலும் 2009, 2011 ஆகிய வருடங்களில் பைனல் வரை சென்ற அந்த அணி தோற்றுப்போனது. அதைவிட 2013 முதல் முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் நட்சத்திரம் விராட் கோலி வழிநடத்திய போதுதான் அந்த அணிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினார்கள்.

RCB

- Advertisement -

புதிய கெளரவம்:
ஏனெனில் அவரது தலைமையில் கிறிஸ் கெயில், ஏபி டிவில்லியர்ஸ் போன்ற பல நட்சத்திரங்கள் தங்களது அபார திறமைகளால் ரசிகர்களை கவரும் பல பிரம்மாண்ட வெற்றிகளை பெற்றுக் கொடுத்தனர். மேலும் கேப்டனாக விராட் கோலியும் பேட்டிங்கில் ரன் மழை பொழிந்து முதல் கோப்பையை முத்தமிட வேண்டும் என்ற முயற்சியில் முழுமூச்சுடன் போராடிய போதிலும் 2016 தொடரின் இறுதிப்போட்டி வரை சென்ற அந்த அணி மீண்டும் தோற்றது. ஆனாலும் கூட மனம் தளராமல் ஒவ்வொரு வருடமும் கோப்பைக்காக போராடி வரும் அந்த அணி இம்முறை புதிய கேப்டன் டு பிளசிஸ் தலைமையில் சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக வெல்ல போராடி வருகிறது.

இந்நிலையில் வரலாற்றில் தங்களது அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை கௌரவிக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. “ஆர்சிபி ஹால் ஆஃப் பேம்” என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கௌரவத்தை வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ஜாம்பவான் கிறிஸ் கெயில் மற்றும் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோரை கௌரவப்படுத்தும் வகையில் பெங்களூரு அணி நிர்வாகம் இந்த புதிய விருதை அறிவித்துள்ளது.

Gayle 1

ஹால் ஆஃப் பேம்:
இந்த விருதுக்கு தகுதியான 3 விதிமுறைகள் இதோ:
1. குறைந்தது பெங்களூர் அணிக்காக 3 வருடங்கள் விளையாடியிருக்க வேண்டும்.
2. தற்போது வேறு எந்த அணியிலும் விளையாடாமல் இருக்க வேண்டும்.
3. பெங்களூரு அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்.

- Advertisement -

அந்த வகையில் கடந்த 2011 முதல் 2017 வரை பெங்களூருவின் ஐபிஎல் பயணத்தில் முக்கிய பங்காற்றிய கிறிஸ் கெய்ல் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள், அதிக ரசிகர்கள், அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த பேட்ஸ்மேன் போன்ற பல சாதனைகளை படைத்து பெங்களூருவுக்காக பெருமை சேர்த்தவர். அதேப்போல் 2011 – 2021 வரை 10 வருடங்களாக உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் மைதானத்தின் நாலா புறங்களிலும் சுழன்றடித்து பல வெற்றிகளையும் சாதனைகளையும் பெற்றுக்கொடுத்த ஏபி டீ வில்லியர்ஸ் ரசிகர்களால் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் கொண்டாடப்படுபவர்.

இந்த இருவருமே கடந்த பல வருடங்களாக ரசிகர்களை மகிழ்வித்து இந்த வருடம் தான் முதல் முறையாக பெற்று ஓய்வு பெற்றதால் விளையாடவில்லை. இதில் பெங்களூருவுக்காக 157 போட்டிகளில் விளையாடியுள்ள ஏபி டிவில்லியர்ஸ் 4522 ரன்களை 158.33 என்ற ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் எடுத்துள்ளார். அதேபோல் சூறாவளி போல் சுழன்றடித்த கெயில் பெங்களூருவுக்காக 91 போட்டிகளில் 5 சதங்கள் 21 அரை சதங்கள் உட்பட 3240 ரன்களை 3420 ரன்களை விளாசி வெற்றிக்காக பங்காற்றினார்.

- Advertisement -

விராட் கோலி பாராட்டு:
இது பற்றி பெங்களூர் அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ஆன்லைன் வாயிலாக அந்த கவுரவத்தை கிறிஸ் கெயில் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் பெற்றுக் கொண்டனர். இந்த 2 ஜாம்பாவான்களுடன் இணைந்து விளையாடிய விராட் கோலி அவர்களைப் பாராட்டும் வகையில் பேசியது பின்வருமாறு. “புதுமை, திறமை போன்ற பல அம்சங்களால் கிரிக்கெட்டை ஏபி டிவிலியர்ஸ் மாற்றியவர். அவரின் மரபுகள் ஆர்சிபியை தைரியமாக எப்போதும் விளையாட வைக்கிறது. அவர்கள் இருவர்களுடன் இணைந்து விளையாடியது எனக்கு ஸ்பெஷலானது. இன்று ஐபிஎல் மற்றும் ஆர்சிபி இந்த அளவுக்கு வளர்வதற்கு அவர்களது தாக்கம் விலை மதிப்பற்றதாக இருந்துள்ளது” என்று பேசினார்.

ABD

இந்த கௌரவத்தைப் பெற்ற ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோரும் ஆன்லைன் வாயிலாக விராட் கோலி உட்பட பெங்களூர் அணி நிர்வாகத்து நன்றி தெரிவித்து இதர வீரர்களிடையே மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் உணர்ச்சிபொங்க உரையாற்றினார்கள். கிரிக்கெட்டில் ஐசிசி தான் இதுபோன்ற ஓய்வுபெற்ற தரமான ஜாம்பவான் வீரர்களுக்கு ஹால் ஆஃப் பேம் விருதுகளை ஒவ்வொரு வருடமும் வழங்கி கவுரவித்து வருகிறது.

இதையும் படிங்க : 1 ரன்னில் தவறிப்போன இரட்டைசதம் ! 145 வருட டெஸ்ட் வரலாற்றில் பரிதாபத்தை பெற்ற நட்சத்திர இலங்கை வீரர்

ஆனால் ஐபிஎல் போன்ற தனியார் டி20 கிரிக்கெட்டில் முன்னாள் வீரர்களுக்கு கௌரவம் வழங்குவது இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் மும்பை, சென்னை போன்ற வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் கூட செய்ய நினைக்காத கௌரவத்தை பெங்களூரு அணி நிர்வாகம் தங்களுக்காக பாடுபட்ட வீரர்களை கௌரவிப்பதற்காக புதிதாக அறிமுகப்படுத்தி செய்தும் காட்டியுள்ளது பாராட்டுகளை பெற்றுள்ளது.

Advertisement