ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்திக்கை வெளியே விடாத ஆர்சிபி.. 2 பதவியை கொடுத்து வெளியிட்ட அறிவிப்பு

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் கோடைகாலத்தில் இந்திய ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்றது. அதில் கொல்கத்தா சாம்பியன் பட்டம் வென்ற நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளே ஆஃப் சுற்றுடன் வெளியேறியது. குறிப்பாக தங்களுடைய கடைசி லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை தோற்கடித்து வெளியேற்றிய அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றில் தோல்வியை சந்தித்து வெளியேறியது.

அத்துடன் நட்சத்திர சீனியர் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த 2008 முதல் டெல்லி, மும்பை, குஜராத், கொல்கத்தா போன்ற பல்வேறு அணிகளில் விளையாடிய அவர் பெங்களூரு அணியில் சிறந்த பினிஷராக விளையாடினார் என்று சொல்லலாம். சொல்லப்போனால் வர்ணனையாளராக அவதரித்ததால் அவருடைய இந்திய கேரியர் மொத்தமாக முடிந்ததாக பார்க்கப்பட்டது.

- Advertisement -

புதிய அறிவிப்பு:
இருப்பினும் 2022 சீசனில் 330 ரன்களை 183 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கியதால் இந்திய அணியில் கம்பேக் கொடுத்த தினேஷ் கார்த்திக் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் விளையாடினார். அந்த நிலையில் தற்போது 37 வயதை கடந்து விட்டதால் இந்த வருடத்துடன் ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் 2025 சீசன் முதல் தினேஷ் கார்த்திக் தங்களுடைய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக செயல்படுவார் என்று ஆர்சிபி அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது பற்றி ட்விட்டரில் ஆர்சிபி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளது பின்வருமாறு. “எங்களுடைய கீப்பரை வரவேற்கிறோம். தினேஷ் கார்த்திக் ஆர்சிபி அணியில் புதிய அவதாரத்தில் வருகிறார்”

- Advertisement -

“டிகே எங்களுடைய ஆண்கள் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக செயல்படுவார்” என்று கூறியுள்ளது. இது ஆர்சிபி ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் தோனிக்கு பின் அதிக ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக சாதனைப் படைத்துள்ள தினேஷ் கார்த்திக் கிரிக்கெட்டைப் பற்றிய நுணுக்கங்களை நன்றாக தெரிந்தவர் என்பதை அவருடைய வர்ணனையில் பலமுறை பார்த்துள்ளோம்.

இதையும் படிங்க: விராட் கோலி ஆடலனா.. நானும் ஆடல விட்ருங்க.. பி.சி.சி.ஐ-யிடம் விட்டு கொடுக்காத ரோஹித் சர்மா – என்ன நடந்தது?

எனவே ஓய்வுக்கு பின் அவரை வெளியே விட விரும்பாத ஆர்சிபி நிர்வாகம் தங்களுடைய அணியிலேயே 2 பதவிகளை கொடுத்து தக்க வைத்துள்ளது. இது தமிழக ரசிகர்களிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சிஎஸ்கே அணியில் தமிழக வீரர்களுக்கு பயிற்சியாளராக கூட பெரிய வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் ஆர்சிபி அணியில் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக்கிற்கு பயிற்சியாளராக 2 பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement