- Advertisement -
ஐ.பி.எல்

மும்பை வீரராக இருந்தும் ஷ்ரேயாஸ் ஐயர் இப்படி செய்தது ஆச்சரியமாக இருந்தது – அம்பத்தி ராயுடு பேட்டி

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது லீக் ஆட்டத்தில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 11 ரன்கள் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்தி இந்த தொடரில் முதல் வெற்றியினை பதிவு செய்தது. இந்த போட்டியின் போது முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்கள் குவித்தது.

ஷ்ரேயாஸ் ஐயர் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய வீரர் : அம்பத்தி ராயுடு

அதன் பின்னர் அடுத்ததாக விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களின் முடிவில் 232 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்ததால் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியின் போது பஞ்சாப் அணி சார்பாக மூன்றாவது வீரராக களமிறங்கிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 42 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் என 97 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் 19-வது ஓவரின் இறுதியிலேயே 97 ரன்கள் அடித்திருந்தாலும் 20-ஆவது ஓவரை முழுவதுமாக விளையாடிய ஷஷாங்க் சிங் 5 பவுண்டரியுடன் 23 ரன்கள் அடித்தார். அதனால் கடைசி ஓவரின் போது ஷ்ரேயாஸ் ஐயருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பே கிடைக்காமல் போனது. ஆனாலும் சதத்தை தவறவிட்டதை நினைத்து எந்த ஒரு வருத்தமும் இல்லாமல் ஷ்ரேயாஸ் ஐயர் மைதானத்தில் இருந்து சிரித்தபடியே வெளியேறினார்.

அதுமட்டும் இன்றி போட்டியின் முடிவில் பேசியிருந்த ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் : கடைசி ஓவரின் போது ஷஷாங்க் சிங்கிடம் பவுண்டரி அடிக்க வாய்ப்பு கிடைத்தால் அனைத்து பந்துகளையும் பவுண்டரியாக அடியுங்கள் என்னுடைய சதத்தை குறித்து நீங்கள் யோசிக்க வேண்டாம் என்றும் கூறியதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் சுயநலம் இன்றி தனது சதத்தை யோசிக்காமல் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடியதற்கு பலரது மத்தியில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

- Advertisement -

இவ்வேளையில் முன்னாள் சிஎஸ்கே வீரரான அம்பத்தி ராயுடுவும் ஷ்ரேயாஸ் ஐயரின் இந்த செயலை பாராட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஷ்ரேயாஸ் ஐயரின் இந்த மனநிலை உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒன்று. ஏனெனில் சதத்தை தியாகம் செய்த அவர் அணியின் வெற்றியே முக்கியம் என்று யோசித்துள்ளார். இப்படி ஒரு மும்பை வீரர் யோசித்ததை பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது.

இதையும் படிங்க : ரிவியூ கேக்காமல் வெளியேறியதால் மோசமான சாதனைக்கு ஆளான கிளென் மேக்ஸ்வெல் – விவரம் இதோ

ஏனென்றால் பொதுவாகவே மும்பையில் வளரும் கிரிக்கெட்டர்கள் எப்பொழுதும் சதம், சதம் என்று தான் பேசுவார்கள். ஆனால் ஷ்ரேயாஸ் ஐயர் சதம் முக்கியமில்லை அணியின் வெற்றி தான் முக்கியம் என்று யோசித்தது புத்திசாலித்தனமான ஒன்று என அம்பத்தி ராயுடு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -