நான் மொதல்ல ஓய்வை அறிவிச்சிட்டு அப்புறம் வாபஸ் வாங்குனது இதுக்காக மட்டும் தான் – ராயுடு கொடுத்த விளக்கம்

Rayudu

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக மிடில் ஆர்டடரில் விளையாடி வந்த அம்பத்தி ராயுடு 2018-ஆம் ஆண்டில் தான் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த வேளையில் நிச்சயம் 2019 ஆம் ஆண்டிற்கான உலக கோப்பை அணியில் இடம் பெறுவார் பெரிய நம்பிக்கையை அவர் வைத்திருந்தார். ஆனால் உலக கோப்பை தொடருக்கு முன்பாக அவரை இந்திய தேர்வு குழு நிராகரித்தது. மேலும் அவருக்கு பதிலாக விஜய் சங்கரை அணியில் தேர்வு செய்தது. இதன் காரணமாக தான் அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து விரக்தியடைந்த அவர் உலகக்கோப்பையை காண 3டி கண்ணாடியை ஆர்டர் செய்து உள்ளேன் என பிசிசிஐக்கு எதிராக கடுமையான ஒரு ட்வீட்டை வெளியிட்டு இருந்தார்.

அந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் தவான் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறிய போது ராயுடு தான் சேர்க்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் பிசிசிஐக்கு எதிரான அவரது அந்தக் கருத்தின் காரணமாக மயங்க் அகர்வாலை மாற்று வீரராக இங்கிலாந்து அனுப்பியது பிசிசிஐ. அதன்பின்னர் 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ராயுடு அறிவித்த அறிவித்தார்.

- Advertisement -

ஆனால் அதற்கடுத்த ஒரு மாதத்திலேயே அவர் மீண்டும் தனது ஓய்வு முடிவை வாபஸ் பெற்றார் அதுமட்டுமின்றி தான் தொடர்ந்து ஹைதராபாத் அணிக்கான விளையாடப் போகிறேன் என்றும் அப்படி விளையாடுவதன் மூலம் இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்று சபதம் செய்தார். ஆனால் இன்று வரை அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது தான் ஏன் வாபஸ் பெற்றேன் என்பது குறித்தும் பேசியுள்ளார்.

rayudu

இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் ஓய்வை அறிவித்து ஒரு அவசியமான முடிவு. அப்போது எனக்கு கன்னட நாட்டில் நடைபெற்ற டி20 போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு தேடி வந்தது. ஆனால் நான் இந்திய அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்பதை மட்டுமே விரும்பினேன். அதுமட்டுமின்றி நான் வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்க விரும்பவில்லை.

- Advertisement -

rayudu

நிச்சயம் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்றுதான் என் ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் விளையாட ஆரம்பித்தேன் என ராயுடு கூறியது குறிப்பிடத்தக்கது. ஆனால் வயது மூப்பின் காரணமாக இனியும் அவர் இந்திய அணிக்கு தேர்வாவதற்கு வாய்ப்பே இல்லை என்று பலரும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement