உண்மையை சொன்னதால் ராயுடு மீது நடவடிக்கை. ராயுடுவை காலி செய்ய நினைக்கும் நிர்வாகம் – விவரம் இதோ

Rayudu
- Advertisement -

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்தும் இந்திய அணி வீரர் ராயுடு ஓய்வு முடிவை அறிவித்தார். இந்நிலையில் மீண்டும் பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்டு சமீபத்தில் நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே மற்றும் சையத் முஷ்டக் அலி கோப்பை தொடரில் ஐதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார்.

Rayudu

- Advertisement -

இந்நிலையில் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் உள்ளதாகவும், பணம் மற்றும் ஊழல் வாதிகளால் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் நிரம்பியிருப்பதால் இந்த மாநிலம் எவ்வாறு கிரிக்கெட்டில் முன்னேறும் என்பது போன்ற அடுக்கடுக்கான புகார்களை ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவரான அசாருதீனிடம் தெரிவித்திருந்தார். இது குறித்து பதிலளித்த அசாருதீன் அவர் விரக்தி அடைந்த வீரர் இது தனிப்பட்ட பிரச்சினையாக பார்க்க வேண்டும்.

கிரிக்கெட் சங்கத்தோடு சேர்த்து வைத்து எதையும் கூறக்கூடாது என்பது போல தனது பதிலை அறிவித்திருந்தார். இந்நிலையில் ராயுடுவின் இந்த புகாரால் பரபரப்பான ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் அவரகள் மீது பழி சுமத்தி இழிவை ஏற்படுத்தும் விதமாக ராயுடு பேசியதாகக் கூறி தற்போது அவர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சங்க விதிகளை மீறி கிரிக்கெட் நிர்வாகத்தில் முடிவுகளை பாதிக்கும் வண்ணம் அவர் பேசி உள்ளதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க இருக்கிறார்களாம்.

rayudu

இந்நிலையில் ராயுடுவின் பேச்சுக்கு முன்னாள் வீரர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ராயுடு சொன்னது உண்மைதான் அவர் அனுபவம் வாய்ந்த கேப்டன் அவர் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் முறைகேடுகள் நடக்கின்றன என்பது போல சிலர் கூறி வருகின்றனர். உண்மையைச் சொன்னார் என்பதற்காக ராயுடு மீது எடுக்கப்படும் இந்த நடவடிக்கை சரியானது அல்ல. சில வருடங்களாக ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் முறையாக எதுவும் நடைபெறுவதில்லை பணத்துக்காகவே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றும் சிலர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement