இந்திய சர்வதேச அணியில் இடம்பெற வேண்டும் என்றால் ரஞ்சி கோப்பைகளிலோ, u19 கோப்பைகளிலோ சிறப்பாக ஆடினால் மட்டுமே இந்திய அணியில் இடம்பெறுவது சாத்தியம் . ஆனால் ஐபில் என்ற தொடர் வந்தவுடன் அதிலிருந்து பல்வேறு இளம் வீரராகள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் சென்னை அணியில் தற்போது சிறப்பாக விளையாடி வரும் அம்பதி ராயுடுவிற்கு இங்கிலாந்திற்கு எதிராக விளையாட போகும் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
தற்போது ஐபில் போட்டிகளில் சென்னை அணியில் விளையாடி வரும் ராயுடு .ஏற்கனவே 2010 ஐபில் சீசனில் மும்பை அணிக்காக ஆடினார். அதன் பின்னர் பின்னர் 2013 நியூஸிலாந்திற்கு இடையேயான சர்வதேச போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றார் . அந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ராயுடு தனது முதல் போட்டியிலேயே அரை சத்தம் அடித்த 12வது இந்திய வீரர் என்ற பட்டியலில் இடம் பிடித்தார்.
அதன் பின்னர் இந்திய அணியில் ஒரு சில சர்வதேச போட்டிகளில் இடம் பெற்ற 2015 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா இடையேயான டி20 போட்டியில் தான் கடைசியாக ஆடினார் . அதன் பின்னர் சர்வேதேச இந்தியா அணியில் டெம்பெறாத அம்பதி ராயுடு தற்போது சென்னை அணியில் சிறப்பாக ஆடிவருகிறார். இதனால் ஐபில் முடிந்ததும் இங்கிலாந்திற்கு பயணம் செய்யும் இந்திய அணியில் ராயுடு இடம்பெற பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக இந்திய தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தெரிவிக்கையில் “தற்போது நடந்து வரும் ஐபில் போட்டியில் சென்னை அணியில் உள்ள ராயுடு சிறப்பாக விளையாடுகிறார். மேலும் ராயுடுவின் பேட்டிங் திறன் மிகுந்த உச்சத்தில் இருக்கிறது . இதன் மூலம் இன்னும் சில தேர்வு வாய்ப்புகளை எங்களுக்கு தந்திருக்கிறார். இதனால் இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் ராயுடு இடம்பெற வாய்ப்புள்ளது ” என்று தெரிவித்துள்ளார்