IND : முடிவுக்கு வரும் ராயுடுவின் கிரிக்கெட் வாழக்கை. காரணம் தோனியா – விவரம் இதோ

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மடற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

Dhoni
- Advertisement -

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மடற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Worldcup

- Advertisement -

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இதுவரை 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 165 ரன்கள் மட்டுமே அடித்த விஜய் ஷங்கர் இடப்பிடித்துள்ளார். ராயுடு அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் விஜய் ஷங்கர் தேர்வானது எப்படி என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி சாம்பியன்ஸ் கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் 4 ஆவது வீரருக்கு ராயுடுவிற்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், ராயுடு எதிர்பார்த்த அளவு தனது திறமையை நிரூபிக்க தவறினார். ஆனால், விஜய் ஷங்கர் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலுமே தன் திறமையை நிரூபித்து உள்ளார் என்றும் அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vijay Shankar

இந்த உலகக்கோப்பை தொடரில் இடம்பெறவே முதல்தர போட்டிகளில் இருந்து ராயுடு ஓய்வு பெற்றார். அதன்பிறகு தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடி வந்த அவர் தொடர்ந்து ரன்களை குவிக்க திணறிவருவதும், பெரிய அளவில் ரன்களை குவிக்காததுமே காரணம் என்று தெரிகிறது. ராயுடுவிற்கு இந்திய அணியில் அதிக வாய்ப்பு கொடுக்கப்படும் அவர் நம்பிக்கையான அளவிற்கு ஆட்டத்தினை வெளிப்படுத்தவில்லை.

- Advertisement -

மேலும், பாண்டியாவுக்கு பதிலாக இந்திய அணியின் இடம்பெற்ற இளம் ஆல்ரவுண்டர் விஜய் ஷங்கர் பேட்டிங், பீல்டிங் மற்றும் பவுலிங் என அனைத்திலும் சிறந்து விளங்க அவரை இந்திய அணி தேர்வுக்குழு உலகக்கோப்பை இந்திய அணிக்கு தேர்வு செய்தது. மேலும், கேப்டன் கோலி மற்றும் தோனி ஆகியோர் விஜய் ஷங்கரின் தேர்வுக்கு ஆதரவாக இருந்தனர் என்றும் தெரிகிறது.

Rayudu

தோனியின் தலைமையில் சென்னை அணிக்காக ஆடிவரும் ராயுடு மேலும் இந்திய அணிக்காகவும் பல போட்டிகளில் தோனியுடன் இணைந்து ஆடியும் தோனி மற்றும் கோலி ஆகியோர் ராயுடுக்கு உதவிக்கரம் நீட்டவில்லை 33 வயதான ராயுடு இந்திய அணிக்காக 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement