Worldcup : ராயுடு, விஜய் ஷங்கர் ரெண்டு பேருமே வேஸ்ட். இவருதான் பெஸ்ட் – விவரம் இதோ

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

Vijay-Shankar
- Advertisement -

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Worldcup

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்திய அணியில் இருந்து ராயுடு உலகக்கோப்பை தொடருக்கு தேர்வாகாததும், விஜய் ஷங்கர் தேர்வானது குறித்தும் பெருமளவில் சர்ச்சை வெடித்தது. இருப்பினும், இந்திய அணியின் 4 ஆவது வீரராக விஜய் ஷங்கரை தேர்வுக்குழு தேர்வு செய்தது. ஆனால், இவர்கள் இருவருமே இந்திய அணிக்கு தேவையில்லை என்று ரசிகர்கள் எதிர்ப்புகளை இணையத்தின் வழியாக தெரிவித்து வருகின்றனர்.

Rahul

அதற்கு முக்கிய காரணம் ராயுடு மாற்று விஜய் ஷங்கர் ஆகியோர் இந்த ஐ.பி.எல் தொடரில் மிகவும் மோசமாக ஆடிவருவதே காரணம். இருவரும் இந்த ஐ.பி.எல் தொடரில் 14 போட்டிகளில் பங்கேற்று வெறும் 219 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். மேலும் இருவரது சராசரியும் 19.90 ரன்களே ஆகும். அதேபோல் தனி ஒருவராக மாற்றத்தை ஏற்படுத்தும் ஆட்டம் ஒன்றினை இந்த இருவருமே செய்யவில்லை அதனால் ரசிகர்கள் இந்த இருவரது மீதும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

Pandya

ஆனால், ராகுல் மற்றும் பாண்டியா ஆகியோர் இந்த ஐ.பி.எல் தொடரில் கலக்கி வருகின்றனர். பாண்டியா இறுதிநேர அதிரடி மற்றும் முக்கிய நேரங்களில் விக்கெட் வீழ்த்துவது என்று அசத்த மறுபுறம் ராகுல் துவக்க வீரராக நிலையான அதிரடி ஆட்டத்தினை கொடுத்துவருகிறார். இதனால் 4 ஆவது இடத்தில் ராகுலும், ஆல்ரவுண்டராக பாண்டியா 6 ஆவது இடத்தில் இறங்கவும் இவர்களுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெருகிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement