ஆசியகோப்பைக்கான இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்த முன்னாள் வீரர்.! யார் தெரியுமா.?

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் துவங்க உள்ளது. மொத்தம் 8அணிகள் பங்கேற்கின்றன. இதில் பங்குபெறும் அணிகள் அவர்களது வீரர்களை அறிவித்து வரும் நிலையில், இந்திய அணியும் ஆசியக்கோப்பைக்கான வீரர்களை ஏற்கனவே அறிவித்திருந்தது.

ambati

இப்போது மேலும் ஒரு வீரரை புதிதாக அணியில் இணைத்துள்ளது. அம்பத்தி ராயுடு ஆசியக்கோப்பைக்கான அணியில் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கெதிரான ஒரு நாள் தொடரில் இடம்பிடித்த ராயுடு யோ-யோ தேர்வில் தோல்வியடைந்ததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். யோ-யோ தேர்வில் தோல்வியடைந்ததால் எனக்கு எந்த வருத்தமும் இல்லையென்று ராயுடு ஏற்கனவே அறிவித்திருந்தார். ஏனென்றால், அணியின் உடற்தகுதி மிகவும் முக்கியம்.

மீண்டும் தற்போது, தனது உடற்தகுதியை யோ-யோ டெஸ்டில் நிரூபித்த ராயுடு ஆசியக்கோப்பைக்கான அணியில் தேர்வாகியுள்ளார். Ipl போட்டியில் சிறப்பான அதிரடி ஆட்டத்தினை அவர் வெளிப்படுத்தி சென்னை அணி கோப்பையை கைப்பற்ற உதவி புரிந்தார். மீண்டும் அணியில் இணைந்துள்ளது மனதளவில் மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும் நான் சிறப்பாக விளையாட தயாராகியுள்ளேன் எனவும் தெரிவித்து இருக்கிறார்.

ambati 2

32வயதாகும் ராயுடு 15ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். அணியில் அவ்வப்போது தலைகாட்டி வரும் ராயுடு ஏற்கனவே இந்திய அணிக்காக விளையாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபமாக இந்திய ஏ அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

- Advertisement -