- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எனக்கும் அந்த கனவு இருக்கு.. சான்ஸ் கொடுத்தா இந்தியாவை ஜெய்க்க வைப்பேன்.. ஜடேஜா சிக்னல் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா கழற்றி விடப்பட்டு சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இத்தனைக்கும் 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியை கேப்டனாக வென்ற அவர் 2027 உலகக் கோப்பையில் இந்தியாவை தலைமைத் தாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் அப்போது 40 வயதில் அவரால் அசத்த முடியுமா? என்று சந்தேகம் தேர்வுக்குழு இப்போதே கழற்றி விட்டு புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது. அதனால் 2027 உலகக் கோப்பையில் விராட், ரோஹித் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. அதே போல ஆஸ்திரேலியா தொடரில் மற்றொரு நம்பிக்கை நட்சத்திர ரவீந்திர ஜடேஜாவும் கழற்றி விடப்பட்டது பல ரசிகர்களிடம் அதிருப்தியை உண்டாக்கியது.

- Advertisement -

எனக்கும் சான்ஸ் கொடுங்க:

குறிப்பாக 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் அவரும் ஆல் ரவுண்டராக விளையாடி இந்தியாவின் வெற்றியில் தம்முடைய பங்காற்றினார். அது பற்றி கேட்டதற்கு ஆஸ்திரேலியாவில் எக்ஸ்ட்ரா ஸ்பின்னர் தேவையில்லை என்பதால் ஜடேஜா தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று அஜித் அகர்கர் தெரிவித்தார். இந்நிலையில் 2027 உலகக் கோப்பையில் வாய்ப்பு கொடுத்தால் சிறப்பாக விளையாடி இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவுவேன் என்று ஜடேஜா கூறியுள்ளார்.

இது பற்றி ஜடேஜா பேசியது பின்வருமாறு. “தேர்வு என்னுடைய கையில் இல்லை. ஆனால் நான் விளையாட விரும்புகிறேன். நாளின் இறுதியில் இவை அனைத்தும் கேப்டன், தேர்வுக்குழு, பயிற்சியாளர் சிந்தனைகளைப் பற்றியதாகும். ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் என்னைத் தேர்ந்தெடுக்காததற்காக காரணம் இருக்க வேண்டும். அது பற்றிய அவர்களும் என்னிடம் பேசியதால் தேர்ந்தெடுக்கப்படாதது எனக்கு ஆச்சரியமாக இல்லை”

- Advertisement -

ஜடேஜா சிங்கள்:

“இம்முறை அணியில் என்னால் இடத்தை பிடிக்க முடியவில்லை. சுழற்சி முறை பற்றி கேப்டன், பயிற்சியாளர் தேர்வாளர்கள் என்னிடம் பேசினார்கள். அதற்காக மகிழ்ச்சியடையும் அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும் போது சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த முயற்சிப்பேன். உலகக் கோப்பைக்கு முன் நிறைய ஒருநாள் போட்டிகள் இருக்கிறது. எனவே அப்போட்டிகளில் எனக்கு வாய்ப்பு கிடைத்து சிறப்பாக விளையாடினால் அது இந்திய கிரிக்கெட்டுக்கு பயனாக அமையும்”

இதையும் படிங்க: சொந்த ஊரில் புலியா இருந்துட்டா போதாது.. நியூஸிலாந்து முடிச்சதை மறக்காதீங்க.. இந்திய அணிக்கு கம்பீர் அறிவுரை

“உலகக்கோப்பை வெல்வது ஒவ்வொருவருடைய கனவாக இருக்கும். கடந்த முறை (2023) நாங்கள் அதை நெருங்கியும் இறுதிப்போட்டியில் விழுந்தோம். எனவே அடுத்த முறை நாங்கள் ஒரு படி முன்னேறே இருக்க வேண்டும் என்பதே இலக்காகும்” என்று கூறினார். இதிலிருந்து தம்மை உலகக் கோப்பையில் கழற்றி விட்டு விடாதீர்கள் என்று தேர்வுக்குழுவுக்கு ஜடேஜா சிக்னல் கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -