டி20 உலகக்கோப்பைக்கான அணியில் இவர் இடம்பெறுவதை யாராலும் தடுக்க முடியாது – அசத்தலான பார்மில் உள்ள வீரர்

IND
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பினிஷர் ரோலில் விளையாடியிருந்த ரவீந்திர ஜடேஜா, பேட்டிங்கில் அதிரடியாக ஆடி அந்த இடத்தை நிரப்பினார். அது மட்டுமால்லாமல் தனக்கு பந்து வீச எப்போதெல்லாம் வாய்ப்பு வழங்கப்படதோ அப்போதெல்லாம் சிக்கனமாக பந்து வீசியதோடு மட்டுமல்லாம் எதிரணியின் முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றி, தான் ஒரு சிறந்த ஆல் ரவுண்டர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். ரவீத்திர ஜடேஜாவின் சமீபத்திய ஃபார்மை பார்க்கும்போது, அவர் கண்டிப்பாக வரவிருக்கும் டி20 உலகக் கோப்பை இந்திய அணியிலும் இடம்பிடிப்பார் என்றே தெரிகிறது.

Jadeja

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது பினிஷர் மற்றும் ஆறாவது பௌலராக ஆடிக்கொண்டு வரும் ஹர்திக் பாண்டியா, காயம் காரணமாக பந்து வீசுவதையே இந்த ஐபிஎல் தொடரில் நிறுத்திவிட்டார். இதற்கு முன்னதாக நடைபெற்ற இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில், பாண்டியா பந்து வீசியிருந்தாலும் அவரால் பழைய மாதிரி மிகச் சிறப்பாக பந்து வீச முடியவில்லை. மேலும் அவர் காயத்திலிருந்து பூரணமாக விடுபட்டு வெளியே வந்தாலும், உலகக்கோப்பை போட்டியில் முழுத் திறனோடு செயல் படுவாரா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடரிலும் பேட்டிங்கில் ஹர்திக் பாண்டியா பெரிதாக சோபிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் இந்திய டி20 அணியில் இடம்பிடத்திருக்கும் இன்னொரு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரும் இந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் மோசமாகவே செயல்பட்டிருக்கிறார். ஹர்திக் பாண்டியாவின் மோசமான செயல்பாடு மற்றும் இந்திய அணியில் ஆறாவது பௌலருக்கான தேவை மேலும் ஜடேஜாவின் சமீபத்திய ஃபார்ம் என்பதை அலசிப் பார்க்கும்போது, உலகக் கோப்பை இந்திய அணியில் ஜடேஜா நிச்சயமாக இடம் பிடிப்பார் என்றே தெரிகிறது.

jadeja 1

கடந்த 2019இல் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கு முன்பு வரை இந்திய அணியில் இடம் பெறாத ஜடேஜாவிற்கு கடைசி நேரத்தில் உலகக் கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த தொடரில் நியீசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் அபாரமாக விளையாடி தனது திறமையை நிரூபித்து இருந்த ரவீந்திர ஜடேஜாவிற்கு, அதற்குப் பிறகு தொடர்ந்து இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது.

இந்த ஆண்டு நடைபெற்ற இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக காயத்தினால் இந்திய அணியில் இருந்து வெளியேறிய ஜடேஜா மீண்டும் ஐபிஎல் தொடரில் களமிறங்கி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதுவும் தற்போது இந்திய அணிக்கு தேவைப்படும் பினிஷர் ஆல்ரவுண்டர் ரோலில் தனது திறைமையை நிரூபித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement