வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்டில் சாதனை படைக்க உள்ள ஜடேஜா – என்ன சாதனை தெரியுமா ?

Jadeja

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் வரும் 22ம் தேதி டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது.

jadeja 2

நாளை மறுதினம் துவங்க உள்ள இந்த முதல் போட்டியில் இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை ஒன்றை நிகழ்த்த உள்ளார். அது யாதெனில் இதுவரை இந்திய அணிக்காக 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரவீந்திர ஜடேஜா 192 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இன்னும் 8 விக்கெட்டுகளை அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்டில் வீழ்த்தும் பட்சத்தில் அவர் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெறுவார். மேலும் இந்தியா சார்பில் வேகமாக 200 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையில் இரண்டாவது இடத்தை பிடிப்பார்.

Jadeja 1

முதலிடத்தில் வேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் வைத்துள்ளார். இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் அவர் கண்டிப்பாக இந்த சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த சில தொடர்களாக ஜடேஜா சூப்பர் பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -