ஜடேஜா ரெடி ஆனாலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதில் இப்படி ஒரு சிக்கல் இருக்கு – கவனிச்சீங்களா ?

Jadeja
- Advertisement -

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 3ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. கடந்த நவ்.17ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. பகலிரவு போட்டியாக நடந்த இந்த முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை பெற்றது. இதையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி வரும் 26 ஆம் தேதி மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்திய அணியின் இந்த படுமோசமான தோல்வியை கண்டு பலரும் விமர்சித்து வருகின்றனர்.

ashwin

- Advertisement -

இதன்காரணமாக, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. சுப்மன் கில் விராட் கோலியின் இடத்திற்கு பதிலாக களமிறங்குவதாக பேசப்படுகிறது. இதைத்தொடர்ந்து, முதல் டெஸ்ட் போட்டியில் பாட் கம்மின்ஸ் வீசிய பந்தில் முகமது சமிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதுள்ளதால் மாற்று வீரராக முகமது சிராஜ் அல்லது நவ்தீப் சைனி இடம் பெறுவார்கள்.

இந்திய அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதால் கேஎல் ராகுல் அணியில் இணைய உள்ளார். ஹனுமான் விகாரிக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜா இடம் பெறவது குறித்து ஆலோசனை மேற்கொள்வதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 தொடரில் ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டதால் மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை.

இதனால் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் அவரால் பங்கேற்க முடியவில்லை. இப்போது இந்திய அணியின் மோசமான நிலைமையினால் ரவீந்திர ஜடேஜாவின் உடல்நலம் குணமடைந்து உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்றால் 2வது டெஸ்ட் போட்டியில் பங்குபெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் ஜடேஜா உடற்தகுதி பெற்றாலும் அவர் எந்த இடத்தில் விளையாடுவார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

ஜடேஜாவின் வருகைக்காக டெஸ்ட் ஸ்பெஷலிஸ்டான ஹனுமான் விகாரியை இந்திய அணி வெளியேற்றலாமா ? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஹனுமான் விகாரி பயிற்சி ஆட்டத்தின் போது 195 பந்தில் 104 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அணியில் இருந்து யாரை நீக்குவது ? யாருக்கு பதிலாக ஜடேஜாவுக்கு இடமளிப்பது என்ற சிக்கல் உண்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இரண்டாவது 3 வேகப்பந்து வீச்சாளர் மற்றும் 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவது இந்திய அணியின் திட்டமாக இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement