பிட்ச் டேம்பேரிங் பண்ணி ஏமாத்தப் பாக்குறீங்களா? சந்தேகப்பட்ட கிறிஸ் ஓக்ஸ், அம்பயருக்கு.. ஜடேஜா தரமான பதிலடி

Ravindra Jadeja
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக பர்மிங்காம் நகரில் ஜூலை இரண்டாம் தேதி இரண்டாவது போட்டி துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி 587 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக விளையாடி இரட்டை சதத்தை அடித்து 269 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். அவருடன் ரவீந்திர ஜடேஜா 89, வாஷிங்டன் சுந்தர் 42, ஜெய்ஸ்வால் 87 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

பிட்ச் டேம்பரிங்:

முன்னதாக அந்தப் போட்டியில் கேப்டன் சுப்மன் கில்லுடன் சேர்ந்து 203 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜடேஜா 89 ரன்கள் குவித்து இந்தியாவை வலுப்படுத்தினார். அந்த ஆட்டத்தில் ஒரு தருணத்தில் பந்துகளை எதிர்கொண்ட அவர் சிங்கிள் எடுப்பதற்காக ஓடினார். அப்போது டேஞ்சர் ஏரியா எனப்படும் பிட்ச்சின் மையப் பகுதியில் ஜடேஜா ஓடியது இங்கிலாந்து வீரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதாவது கடைசிக்கட்ட நாட்களில் பிட்ச் சுழலுக்கு சாதகமாக மாறும். அப்படி இல்லையென்றாலும் பேட்ஸ்மேன், பவுலர்கள் ஓடிய காலடித்தடங்கள் சிதைவை ஏற்படுத்தும். அங்கே பந்தை போட்டால் சுழன்று பேட்ஸ்மேன்களை ஏமாற்றி விக்கெட்டுகள் விழ வாய்ப்பிருக்கும். அந்த வகையில் தாம் பந்தை போட விரும்பும் இடத்தில் ஜடேஜா வேண்டுமென்றே ஓடி பிட்ச்சை சேதப்படுத்துவதாக (டேம்பரிங் இங்கிலாந்து வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

ஜடேஜா பதிலடி:

குறிப்பாக இங்கிலாந்து பவுலர் கிறிஸ் ஓக்ஸ் “நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? என்று பாருங்கள்” என ஜடேஜாவிடம் சொல்லி சுட்டிக் காட்டினார். அதற்கு ஜடேஜா “எப்படி இருந்தாலும் நான் அங்கே பவுலிங் செய்யப் போவதில்லை” என்று அவருக்கு பதிலளித்தார். உடனடியாக நடுவர் மற்றும் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் வந்து ஜடேஜாவிடம் விசாரித்தனர்.

இதையும் படிங்க: முச்சதத்தை விட இதை மிஸ் பண்ணதுக்கு யுவி வேதனைப்பட்டாரு.. லாரா மாதிரி கில் 400 அடிப்பாரு.. யோக்ராஜ் பேட்டி

அதற்கு ஜடேஜா “நான் ஏன் இதை செய்யப் போகிறேன்? தற்சமயத்தில் என்னுடைய கவனம் முழுவதும் பேட்டிங்கில் இருக்கிறது” என்று சொல்லி தரமான பதிலடி கொடுத்தார். அதைக் கேட்ட பென் ஸ்டோக்ஸ் சிரித்துக் கொண்டே அடுத்த ஓவரை வீசச் சென்றார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்தை விரைவாக அவுட் செய்யும் முனைப்புடன் இந்திய அணி முயற்சித்து வருகிறது.

Advertisement