2005 ஃபிளைட்ல முதல் முறையா தோனி பாத்தேன்.. இப்போவும் அப்படி இருந்தா பேசத் தயங்குவேன்.. ஜடேஜா பேட்டி

Ravindra Jadeja 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ரவீந்திர ஜடேஜா செயல்பட்டு வருகிறார். ஜாம்பவான் எம்எஸ் தோனி அவருக்கு இந்திய மற்றும் சிஎஸ்கே அணிகளில் போதுமான வாய்ப்புகளைக் கொடுத்து வளர்வதற்கு நிறைய ஆதரவைக் கொடுத்துள்ளார். அதனால் விராட் கோலி, ரோஹித் சர்மா போல தோனியின் மிகச்சிறந்த நட்புறவு கொண்ட ஒரு வீரராக ரவீந்திர ஜடேஜா அறியப்படுகிறார்.

சொல்லப்போனால் 2023 ஐபிஎல் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது கடைசி 2 பந்துகளில் சிக்ஸர் மற்றும் பவுண்டரியை அடித்த ஜடேஜா அற்புதமான ஃபினிஷிங் கொடுத்து தோனி தலைமையில் சிஎஸ்கே 5வது கோப்பையை வெல்ல உதவினார். அதனால் எப்போதுமே கூலாக இருக்கக்கூடிய தோனி அவரை தம்முடைய இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டாடியதை யாராலும் மறக்க முடியாது.

- Advertisement -

2005இல் முதல் சந்திப்பு:

இந்நிலையில் 2005ஆம் ஆண்டு முதல் முறையாக தோனியை நேரில் பார்த்ததாக ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார். அப்போதிலிருந்து 20 வருடங்கள் நட்பை கொண்டிருந்தாலும் கோபமாக இருக்கும் சமயங்களில் இப்போதும் தோனியிடம் பேசத் தயங்குவேன் என்று ஜடேஜா தெரிவித்துள்ளார். இது பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் யூடியூப் சேனலில் அவர் பேசியது பின்வருமாறு.

“சென்னையில் நடைபெற்ற 2005 சேலஞ்சர்ஸ் கோப்பையின் போது முதல் முறையாக எம்எஸ் தோனியை பார்த்தேன். மும்பையிலிருந்து வந்த விமானத்தில் தோனியும் இருந்தார். எக்கனாமி பகுதியில் நான் அமர்ந்திருந்த போது தோனி பிசினஸ் கிளாஸில் அமர்ந்திருந்தார். அப்போது தோனி விமானத்தில் இருப்பதாக அனைவரும் என்னிடம் சொன்னார்கள். இருப்பினும் அவரைப் பார்க்க நான் தயங்கினேன்”

- Advertisement -

பேசத் தயங்குவேன்:

“இப்போதும் தோனி நல்ல மனநிலையில் இல்லாத போது அவரைப் பார்த்து பேசுவதற்கு நான் தயங்குவேன். கோபமாக இருக்கும் போது தோனி யாரிடமும் எதையும் சொல்ல மாட்டார். ஆனால் அவருடைய முகத்தில் அது நன்றாகத் தெரியும். நான் இளமையாக இருந்த போது அவர் எம்எஸ் தோனி என்று நினைத்துக் கொண்டிருப்பேன்”

இதையும் படிங்க: என்னோட கிரிக்கெட் கேரியரை 2 மஹேந்திராக்கள் உருவாக்குனாங்க.. அதுல ஒன்னு தோனி.. ஜடேஜா நெகிழ்ச்சி

“விமானத்தில் பார்த்த போது அவரை நீண்ட தலைமுடியை வைத்திருந்தார். அப்போது தோனியுடன் நாம் ஹோட்டலுக்கு செல்லப்போகிறோம் என்று என்னுடைய மேனேஜர் சொன்னார். அதைக் கேட்டதும் நான் எப்படி தோனியுடன் சேர்ந்து செல்ல போகிறேன்? என்று தயங்கினேன். அதிர்ஷ்டவசமாக தோனி தன்னுடைய மொபைல் ஃபோனை கீழே விட்டு விட்டதால் காத்திருக்க வேண்டிய நிலையில் இருந்தார். அப்போது தான் முதல் முறையாக அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எம்.எஸ். தோனியிடம் நாம் என்ன பேச வேண்டும்? என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன்” எனக் கூறினார்.

Advertisement