- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs WI : முதல் ஒருநாள் போட்டியில் மட்டுமின்றி 3 போட்டியிலும் விளையாடமுடியாத நிலையில் – இந்திய வீரர்

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று துவங்க உள்ளது. அதன்படி ஜூலை 22-ஆம் தேதி இன்று டிரினிடாட் நகரில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள முதலாவது ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியும், நிக்கோலஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோத இருக்கின்றன.

இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி களமிறங்க இருப்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஜடேஜா முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி இந்த முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னர் நடைபெற்ற பயிற்சி போட்டியின் போது முழங்காலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக இவர் முதல் ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது அந்த தகவலானது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் ஜடேஜா விலகியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதோடு ஜடேஜாவின் காயத்தினை இந்திய அணியின் மருத்துவ குழு கண்காணித்து வரும் வேளையில் காயம் எவ்வளவு தீவிரமானது என்பதை மருத்துவர்கள் முடிவு செய்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக முதல் ஒருநாள் போட்டி மட்டுமின்றி ஜூலை 24 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறும் அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் அவர் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. எனவே ஜடேஜா இந்த ஒருநாள் தொடர் முழுவத்தினையும் தவறவிட இருக்கிறார்.

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பையில் பும்ரா, புவியுடன் உம்ரான் மாலிக் பந்துவீச விரும்புகிறேன் – முன்னாள் இங்கி வீரர் கருத்து

இருப்பினும் ஜடேஜாவின் உடல்நிலை குறித்த முழு அறிக்கை வெளியான பிறகே அவர் இந்த தொடரில் இருந்து முற்றிலும் வெளியேறுவாரா? மாட்டாரா? என்ற தகவல் உறுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by