
இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தற்போது இலங்கை நாட்டிற்கு சென்றடைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் அனுபவ ஆல்ரவுண்டரான ஜடேஜாவிற்கு இடம் கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும் இதோடு அவர் கரியர் முடிவுக்கு வருகிறதோ என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது. ஏனெனில் டி20 உலக கோப்பை முடிந்த பின்னர் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகிய மூவரும் ஒன்றாக ஓய்வை அறிவித்திருந்தார்கள்.
அதன் காரணமாக அவர்கள் இனி ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் தொடர்ச்சியாக இடம் பிடித்து விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேவேளையில் உலக கோப்பை தொடர் முடிந்து தங்களுக்கு சிறிது ஓய்வு வேண்டும் என்று ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் கேட்டுக் கொண்டனர்.
ஆனால் அந்த வேண்டுகோளை நிராகரித்து தொடர்ச்சியாக அவர்கள் இருவரும் விளையாட வேண்டும் என்று ஒருநாள் அணியில் கம்பீர் அவர்களை சேர்த்து விட்டார். ஆனால் ஜடேஜா விடுப்பு ஏதும் கேட்காமல் இருந்தாலும் அவருக்கு பிசிசிஐ கட்டாய ஓய்வு கொடுத்து ஒருநாள் போட்டிகளுக்கான அணியிலிருந்து வெளியேற்றி உள்ளது.
மேலும் அவர் இடத்திற்கு தற்போது அக்சர் பட்டேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் போன்ற பேட்டிங் தெரிந்த ஆல்ரவுண்டர்கள் இருப்பதினால் இனி ஒருநாள் கிரிக்கெட்டில் ஜடேஜாவை பார்ப்பது கடினம் என்று பலரும் கூறி வருகின்றனர். அதோடு ஜடேஜா சேர்க்கப்படாதது குறித்து பேசியிருந்த தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் கூறும்போதும் : ஏற்கனவே அணியில் அவரை போன்று பேட்டிங் தெரிந்த வீரரான அக்சர் பட்டேல் இருக்கும்போது ஜடேஜாவை தேர்வு செய்வது அவசியம் என்ன? என்றும் இரண்டு பேரையும் அணியில் வைத்திருந்தால் எப்படி விளையாட முடியும் என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க : முதல் போட்டிக்கு முன்பாகவே விராட், ரோஹித் வெச்சு கம்பீர் சிறப்பான விஷயம் பண்ணிட்டாரு.. நெஹ்ரா பாராட்டு
இதன் காரணமாக அக்சர் படேல் தான் ஜடேஜாவின் இடத்தில் தான் விளையாடுவார் என்பது உறுதியாகி உள்ளது. ஒருவேளை அக்சர் படேல் விளையாட முடியாமல் போகும் பட்சத்தில் அந்த இடத்தில் வாஷிங்டன் சுந்தர் விளையாடுவார் என்பதால் ஜடேஜா இந்திய கிரிக்கெட்டில் இருந்து முற்றிலும் ஓரம் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.