தனது வாழ்நாளின் மிகச்சிறந்த பார்ம்மில் இருக்கும் இவர் இந்திய அணியின் சொத்து. இவர் தொடர்ந்து அணியில் இருப்பார் – கோலி உறுதி

Kohli

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான முதலாவது டி20 போட்டி இன்று ஹைதராபாத் மைதானத்தில் இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில் நேற்று இந்திய அணி கேப்டன் கோலி பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.

Chahal

அப்போது கோலியிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அதில் முக்கியமான கேள்வியாக சாஹல் மற்றும் குல்தீப் ஆகியோரின் இடம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கோலி அளித்த பதிலாவது : இந்திய அணியில் தற்போது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் சாஹல் மற்றும் குல்தீப் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டாலும் டி20 அணியில் பேட்டிங் செய்யும் ஆல்ரவுண்டர் தேவை எனவே தொடர்ந்து சுந்தர் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி ஜடேஜா தற்போது தன் வாழ்நாளின் மிகச் சிறந்த பேட்டிங் பார்மில் உள்ளார். அவர் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து எனவே அவரை தொடர்ந்து இந்திய அணியில் பயன்படுத்தி வருகிறேன். மேலும் பேட்டிங் செய்வது மட்டுமன்றி அவர் ஒரு சிறந்த ஸ்பின்னர் என்பது நாம் அறிந்ததே எனவே அணிக்கு தேவையான அம்சங்களை வைத்து அவர் அணியில் இடம்பிடித்து வருகிறார். மேலும் சூழ்நிலையில் இருக்கும் ஏற்கும் ஏற்ப அணி தேர்வு இருக்கும் என்றும் கோலி கூறினார்.

Jadeja 1

ஆஸ்திரேலியாவில் 5 பந்துவீச்சாளர்களுடன் விளையாடுவது கடினம் ஏனெனில் 5 பந்துவீச்சாளர்களும் 4 வரை சரியாக வீசிவிட முடியும் என்று கூற முடியாது. எனவே பேட்டிங் தெரிந்த ஆல்ரவுண்டர்கள் அணியில் இருந்தால் அது அணிக்கு கூடுதல் பலம் என்பதாலே தொடர்ந்து டி20 அணியை அவ்வாறு தேர்வு செய்து வருகிறேன். இந்த காரணத்தினால் ஜடேஜா 2020 உலககோப்பை டி20 இந்திய அணியிலும் முக்கிய வீரராக இருப்பார் என்று கோலி கூறினார்.

- Advertisement -