IND vs AUS : கபில் தேவின் சாதனையை முறியடித்து வரலாறு படைத்த ஜடேஜா – அசத்தல் சாதனை

Jadeja-and-Kapil
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதன்காரணமாக தற்போது ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.

Rohit-Toss

- Advertisement -

அதன்படி இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் தற்போது முதல் இன்னிங்சில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணியானது தேநீர் இடைவேளை வரை 6 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரரான உஸ்மான் கவாஜாவை(81) வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அதன்படி இன்று தனது 62 வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடி வரும் ஜடேஜா கவாஜாவின் இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 250-வது விக்கெட்டை பதிவு செய்தார்.

Jadeja

மேலும் பேட்டிங்கிலும் 2500 ரன்களை குவித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவாக 2500 ரன்கள் மற்றும் 250 விக்கெட்டுகள் எடுத்த இரண்டாவது வீரராக இயான் போத்தம்-க்கு பிறகு வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இயான் போத்தம் 55 போட்டிகளில் 2500 ரன்களையும் 250 விக்கெடுக்களையும் கைப்பற்றியதே சாதனையாக இருந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் அவருக்கு அடுத்து தற்போது ரவீந்திர ஜடேஜா இந்த பட்டியலில் 62-ஆவது போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் 65 போட்டிகளில் 2500 ரன்கள் மற்றும் 250 விக்கெட்டுகள் எடுத்து நான்காம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : உலகிலேயே இங்கிலாந்து தான் மாஸ் டெஸ்ட் டீம் – தனக்குத்தானே புகழ்ந்து கொண்ட மைக்கல் வாகனை நோஸ் கட் செய்த மார்க் வாக்

இந்நிலையில் 3 டெஸ்ட் போட்டிகள் முன்னதாகவே கபில் தேவின் இந்த சாதனையை ரவீந்திர ஜடேஜா தகர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜடேஜாவை தவிர்த்து மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இந்த முதல் இன்னிங்சில் இதுவரை 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள வேளையில் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement