இந்தியாவுக்காக வீரனாக போராடிய ஜடேஜா.. 72 வருடத்துக்கு பின் தனித்துவ சாதனை.. கங்குலி, கபில் தேவ் சாதனை சமன்

- Advertisement -

லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்தியாவை 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இங்கிலாந்து 2 – 1* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஜூலை 10ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 387 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய இந்தியாவும் 387 ரன்கள் அடித்து ஸ்கோரை சமன் செய்தது. அதைத்தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து 192 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டாப் ஆர்டரில் ராகுல் 33 ரன்கள் எடுத்ததைத் தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்கவில்லை. அதனால் லோயர் ஆர்டரில் ஜடேஜா நங்கூரமாக வெற்றிக்குப் போராடினார்.

- Advertisement -

வீரனாக போராடிய ஜடேஜா:

குறிப்பாக நித்திஷ் ரெட்டியுடன் சேர்ந்து 35 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் இந்தியாவை வெற்றி பெற வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் நித்திஷ் ரெட்டி 13 ரன்னில் அவுட்டானதால் மாலை 6.30 மணிக்கெல்லாம் இங்கிலாந்து எளிதாக வெல்லும் என்று நம்பப்பட்டது. ஆனால் அப்போது டெயில் எண்டர்களுடன் கைகோர்த்த ஜடேஜா இந்தியாவின் வெற்றிக்காக முழுமூச்சுடன் போராடினார்.

பும்ரா மற்றும் சிராஜுடன் சேர்ந்து கடைசி 2 விக்கெட்டுக்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் 181 பந்துகளை எதிர்கொண்டு 61* ரன்களை அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் வீரனாக இந்தியாவின் வெற்றிக்கு போராடினார். ஆனால் பும்ரா 5, சிராஜ் 4 ரன்களுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியாததால் இங்கிலாந்து பரிதாபமாக தோற்றது. இருப்பினும் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜடேஜா 72 ரன்கள் அடித்து வெற்றிக்கு போராடிய 2வது இன்னிங்ஸில் 61* ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

லார்ட்ஸ் தனித்துவ சாதனை:

இதன் வாயிலாக கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் 72 வருடங்கள் கழித்து ஒரு போட்டியின் 2 இன்னிங்சிலும் 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற தனித்துவமான சாதனையை ஜடேஜா படைத்துள்ளார். இதற்கு முன் 1952ஆம் ஆண்டு இங்கே வினோ மன்கட் 72, 184 ரன்கள் அடித்திருந்தார். அதற்குப்பின் ஜடேஜா தான் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: தோத்தாலும் பெருமைப்படுறேன்.. இந்தியா தோற்க இதான் 3 காரணம்.. ஆட்டமே இப்போ தான் ஆரம்பமாகுது.. கில் பேட்டி

இது போக கபில் தேவுக்குப் பின் சர்வதேச கிரிக்கெட்டில் 7000 ரன்கள் மற்றும் 600 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையையும் ஜடேஜா படைத்துள்ளார். கடந்த போட்டியில் 89, 69* ரன்கள் எடுத்த அவர் இப்போட்டியில் 72, 61* ரன்கள் எடுத்துள்ளார். அந்த வகையில் தொடர்ச்சியாக 4 இன்னிங்ஸில் அவர் 4 அரை சதங்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் வாயிலாக இங்கிலாந்தில் தொடர்ந்து 4 அரை சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சௌரவ் கங்குலி (2002), ரிஷப் பண்ட் (2021) சாதனையையும் ஜடேஜா சமன் செய்துள்ளார்

Advertisement