ஜடேஜாவின் அசத்தலான ஆட்டத்தினால் இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பை இழந்த இளம் வீரர் – ரொம்ப பாவங்க அவரு

Jadeja
- Advertisement -

இந்தியாவில் தற்போது ஐபிஎல் தொடர் தடை பட்டுள்ளதால் அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் ஜூன் மாதம் 18 ஆம் தேதி நடைபெற உள்ள இந்த இறுதிப் போட்டிக்கான அணியை பிசிசிஐ கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த தொடருக்கான அணியே இங்கிலாந்து அணிக்கெதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்று விளையாடும் என்று கூறப்பட்டுள்ளது.

Williamson-1

- Advertisement -

இதன் காரணமாக இந்த தொடரில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்து அதிக விவாதம் சமூகவலைதளத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது ஜடேஜாவால் வாய்ப்பை இழந்த இளம் வீரர் குறித்து நாம் இந்த பதிவில் காண உள்ளோம். ஆஸ்திரேலிய தொடரின் போது எலும்பு முறிவு காரணமாக கடைசி டெஸ்ட் போட்டியை தவறவிட்ட ஜடேஜா இங்கிலாந்து தொடரையும் தவறவிட்டார்.

இந்நிலையில் ஐபிஎல் தொடரின் மூலம் கம்பேக் கொடுத்த ஜடேஜா பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்று பிரிவுகளும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆஸ்திரேலிய தொடரில் எங்கு விட்டாரோ அதே இடத்திலிருந்து மீண்டும் தனது ஃபார்மை ஐபிஎல் தொடரில் மீட்டெடுத்த ஜடேஜா இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான அணியிலும் இடம் பிடித்து விட்டார்.

jadeja 1

ஆனால் அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக வாய்ப்பை தவறவிட்ட ஹர்திக் பாண்டியா தற்போது வருத்தத்தில் வருத்தத்தில் இருப்பார் என்றே கூறலாம். ஏனெனில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் அணியில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த பாண்டியா நிச்சயம் இம்முறை டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பார் என்று நினைத்திருப்பார். ஆனால் சமீபகாலமாக அவர் பந்து வீசாமல் இருப்பதால் அவரை அணியில் சேர்க்க முடியாது என்று தேர்வு குழு உறுதியாக கூறிவிட்டது. மேலும் டெஸ்ட் அணியில் விளையாட வேண்டும் என்றால் நிச்சயம் அவர் பந்துவீசும் அளவிற்கு தகுதியாக இருக்க வேண்டும் என்றும் கண்டிப்பாக கூறிவிட்டது.

Pandya

இதனால் டெஸ்ட் போட்டிக்கான அணியிலிருந்து ஹர்டிக் பாண்டியா வாய்ப்பை இழந்தார் அதேவேளையில் இந்திய அணியில் முதன்மை ஆல்ரவுண்டராக ஜடேஜா தனது இடத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பேட்டிங் தெரிந்த 5 ஆவது பந்துவீச்சாளரையே எப்போதும் அணியில் விளையாட வைக்க நினைப்பதால் ஜடேஜா இடத்தை யாராலும் அசைக்க முடியாது என்றே கூறலாம்.

Advertisement