நியூஸிலாந்தை 235க்கு சுருட்டிய இந்தியா.. ஜாஹீர் கான் வாழ்நாள் சாதனையை உடைத்த ஜடேஜா அபார சாதனை

Ravindra Jadeja
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் 2 போட்டிகளில் தோற்ற இந்தியா சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராகவும் ஒட்டுமொத்தமாக 12 வருடங்கள் கழித்தும் ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்தது. அதனால் இந்தியா தலை குனிவை சந்தித்த நிலையில் மூன்றாவது போட்டி நவம்பர் ஒன்றாம் தேதி மும்பையில் துவங்கியது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்துக்கு டேவோன் கான்வே 4 ரன்களில் ஆகாஷ் தீப் வேகத்தில் பெவிலியன் திரும்பினார். மறுபுறம் நிதானமாக விளையாட முயற்சித்த கேப்டன் டாம் லாதமை 28 ரன்களில் அவுட்டாக்கிய வாஷிங்டன் சுந்தர் அடுத்ததாக வந்த ரச்சின் ரவீந்திராவையும் 5 ரன்களில் காலி செய்தார்.

- Advertisement -

இந்தியா அசத்தல்:

அவர்களைத் தொடர்ந்து வில் எங் மற்றும் டேரில் மிட்சேல் ஜோடி சேர்ந்து 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சவாலை கொடுத்தனர். அப்போது வில் எங்கை 71 ரன்களில் அவுட்டாக்கிய ரவீந்திர ஜடேஜா அடுத்ததாக வந்த டாம் பிளண்டலை டக் அவுட்டாக்கினார். அதோடு நிற்காத அவர் அடுத்து வந்த கிளன் பிலிப்ஸ் 17, இஷ் சோதி 7, மாட் ஹென்றி 0 ரன்களில் அவுட்டாக்கி அசத்தினார்.

அதே போல மறுபுறம் டேரில் மிட்சேல் அரை சதம் அடித்து 82 ரன்கள் குவித்து சவாலை கொடுத்தார். அப்போது அவரை அவுட்டாக்கிய வாஷிங்டன் சுந்தர் கடைசி விக்கெட்டாக அஜாஸ் பட்டேலையும் 7 ரன்களில் பெவிலியின் அனுப்பினார். அதனால் நியூஸிலாந்தை முதல் இன்னிங்ஸில் இந்தியா முதல் நாளிலேயே 235 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி அசத்தியது.

- Advertisement -

ஜடேஜா சாதனை:

இந்திய அணிக்கு அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 4, ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள். இந்த போட்டியில் எடுத்த 5 விக்கெட்டுகளையும் சேர்த்து ஜடேஜா தம்முடைய டெஸ்ட் கேரியரில் 314 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக 5வது அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற ஜஹீர் கான், இஷாந்த் சர்மாவின் சாதனையை உடைத்துள்ள ஜடேஜா புதிய சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: 120 ரன்ஸ்.. முகேஷ் குமார் அபாரம்.. சுதர்சன், படிக்கல் அட்டகாசத்தால் ஆஸியை திருப்பி அடிக்கும் இந்தியா ஏ

இதற்கு முன் அந்த இருவருமே தலா 311 விக்கெட்டுகளை எடுத்திருந்தனர். தற்போது அந்த இருவரின் வாழ்நாள் சாதனைகளை உடைத்துள்ள ஜடேஜா டாப் 5 பட்டியலுக்குள் நுழைந்து அசத்தியுள்ளார். அந்த பட்டியல்:
1. அனில் கும்ப்ளே: 619
2. ரவிச்சந்திரன் அஸ்வின்: 533
3. கபில் தேவ்: 434
4. ஹர்பஜன் சிங்: 417
5. ரவீந்திர ஜடேஜா: 314*

Advertisement