அந்நியனாக மாறிய அஷ்வின்.. டெல்லி அணியை வீழ்த்த காரணமே அவர்தான் – வியக்க வைத்த அதிரடி

Ashwin
- Advertisement -

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக நேற்று ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்ற நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஒன்பதாவது லீக் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் சொந்த மண்ணில் டெல்லி அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது துவக்கத்திலேயே 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிலும் குறிப்பாக ஜெய்ஸ்வால், பட்லர், சஞ்சு சாம்சன் ஆகிய டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் ராஜஸ்தான் அணி முதல் 8 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 38 ரன்கள் மட்டுமே குவித்து மோசமான நிலையில் இருந்தது.

- Advertisement -

அந்த நேரத்தில் ஐந்தாவது வீரராக களம்புகுந்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த போட்டியின் வெற்றிக்கு திருப்புமுனையான ஒரு இன்னிங்க்ஸை விளையாடியது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏனெனில் நேற்றைய போட்டியில் முதல் 8 ஓவர்களில் முரடிவில் ரன் ரேட் ஐந்துக்கும் குறைவாக சரிந்த வேளையில் 19 பந்துகளை சந்தித்த அஸ்வின் 3 சிக்ஸர்களை பரக்கவிட்டு 29 ரன்கள் குவித்து ரியான் பராக்குடன் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்க்க உதவினார்.

- Advertisement -

அதன் பின்னர் ரியான் பராக் இறுதிவரை ஆட்டமிடக்காமல் 45 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் என 84 ரன்கள் குவிக்க பின்னால் வந்த ஜுரேல் மற்றும் ஹெட்மயர் ஆகியோர் அவருக்கு கை கொடுக்க ராஜஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 185 ரன்களை குவித்தது. அதன் பின்னர் 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 173 மட்டுமே அடித்ததால் 12 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : கிண்டலை கடந்து போராடி முன்னேறும் ரியன் பராக்.. சஞ்சு சாம்சனை முந்தி இளம் இந்திய புயலாக சாதனை

இந்த போட்டியில் 84 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று அசத்திய ரியான் பராக்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டாலும் போட்டியின் திருப்புமுனையை ஏற்படுத்தியதே ரவிச்சந்திரன் அஸ்வின் ஐந்தாவது வீரராக வந்து பயமற்ற பேட்டிங்கை வெளிப்படுத்தி பராக்குடன் சேர்ந்து 50 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தது தான் என்று ரசிகர்கள் அஸ்வினின் ஆட்டத்தை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement