இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் சதம் அடித்திருந்தார். ஆனாலும் அதனை தொடர்ந்து நடைபெற்ற நான்கு டெஸ்ட் போட்டியிலும் அவர் ஒரே மாதிரியாக ஆட்டமிழந்தது அவர் மீது பெரிய அளவு விமர்சனத்தை ஏற்படுத்தியது.
விராட் கோலி இதை செய்தால் போதும் :
அதோடு அந்த தொடரில் அவர் தொடர்ந்து ஆட்டமிழந்தது அவரது மோசமான பேட்டிங் பார்மையும் வெளிகாட்டியிருந்தது. இந்நிலையில் எதிர்வரும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணிகள் விளையாட இருக்கும் அவர் மீண்டும் சிறப்பாக செயல்பட்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அசத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இதன் காரணமாக விராட் கோலியின் பேட்டிங் ஃபார்மை மீட்டெடுப்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் விராட் கோலி இழந்த பார்மை மீட்டெடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : டி20 கிரிக்கெட் ஹார்டிக் பாண்டியா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் செய்த ரோலை விராட் கோலி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் டாப் ஆர்டரில் ஆக்ரோஷமாக விளையாடுவதற்கும், கீழ் வரிசையில் ஆக்ரோஷமாக விளையாடுவதற்கும் விராட் கோலி பக்கபலமாக இருக்க வேண்டும்.
தன்னுடைய வழக்கமான பாணியிலேயே அவருக்கு விளையாடினால் நிச்சயம் இழந்த பார்மை அவரால் மீட்டெடுக்க முடியும். 50 ஓவர் போட்டிகளை பொறுத்த வரை அதிரடியாக விளையாட வேண்டிய அவசியம் கிடையாது. அவரது இயல்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினாலே அவரது இழந்த பார்மை மீட்டெடுக்கலாம் என அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்தியா – இங்கிலாந்து முதல் ஒன்டே நடைபெறும் நாக்பூர் மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்
எதிர்வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியானது நாளை ஜனவரி 6-ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.